For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிலைமை கட்டுக்குள் உள்ளது - கேரள முதலமைச்சர் பேட்டி!

09:29 PM Dec 13, 2023 IST | Web Editor
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிலைமை கட்டுக்குள் உள்ளது   கேரள முதலமைச்சர் பேட்டி
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அதிகரித்து வந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 17-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்தாண்டு தினசரி 1.20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

நவகேரள சதாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியாதவது,"அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கூட்ட மேலாண்மைத் திட்டங்கள் தோல்வியடைந்துவிட்டன என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை நிராகரித்த முதல்வர், ஒவ்வொரு முறையும் சன்னிதானத்தில் அவசரத்தின் அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் மேல்நோக்கி மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

கட்டுப்பாடற்ற அதிக அவசரம் காரணமாகவே நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சில விபத்துகளை ஏற்படுத்துகிறது. எனவே, நாங்கள் மிகுந்த கவனத்துடன் விஷயங்களைக் கையாண்டு வருகிறோம். கடந்த மண்டல சீசனின் ஆரம்ப நாள்களில் நாளொன்றுக்கு சராசரியாக 62 ஆயிரம் பக்தர்கள் சபரிமலைக்குச் சென்றனர். ஆனால் நடப்பு சீசனின் 4 நாட்களிலேயே 88 ஆயிரத்தைத் தாண்டி பக்தர்கள் வருகின்றனர்.

சென்னையில் வெள்ளம், தெலங்கானாவில் பேரவைத் தேர்தல் காரணமாக பக்தர்கள் கூட்டம் சற்று குறைந்த நிலையில், தற்போது அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணத்தால் தரிசன நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. சபரிமலைக் கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement