Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கைது செய்யப்பட்டது சட்டவிரோதம்- எதிர்த்துப் போராடுவேன்" - கேசிஆர் மகள் கவிதா!

02:49 PM Mar 16, 2024 IST | Web Editor
Advertisement

மதுபான கொள்கை வழக்கில்  கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கேசிஆர் மகள் கவிதா டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.  முன்னதாக அவரது கைது சட்டவிரோதமானது என அவர் தெரிவித்தார்.

Advertisement

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கின.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு சிபிஐ கைது செய்தது.  அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கும் பலமுறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்தார்.

சௌத் குரூப் நிறுவனத்திற்கு மதுபான உரிமம் வாங்குவதற்காக ரூ.100 கோடியை ஆம் ஆத்மி கட்சி தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருக்கு வழங்கியதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.  சௌத் குரூப் நிறுவனத்தில் அருண் ராமச்சந்திர பிள்ளை, அபிஷேக் போயினபள்ளி, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா, முகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி, அவரது மகன் ராகவ் மகுண்டா, சரத் ரெட்டி ஆகியோர் இயக்குநர்களாக இருந்தனர்.

இதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் இல்லத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் பல முறை விசாரணை நடத்தினர்.  இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் கவிதாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு பின்னர் கவிதாவை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். 

இந்நிலையில் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, இது ஒரு சட்டவிரோதமான கைது என குற்றம் சாட்டியதுடன், இதனை எதிர்த்து போராடுவேன் என தெரிவித்தார்.

கவிதா எதற்காக கைது செய்யப்பட்டார் என்பதற்கான 14 பக்க விளக்க அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி ஏறக்குறைய 2 மாதங்கள் கழித்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  இந்த வழக்கில் கடந்த ஆண்டில் கவிதாவிடம் அமலாக்கத்துறை 3 முறை விசாரணை நடத்தி அவரது பதில்களை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
ArrestBRSDelhiEDEnforcement DirectorateKavitha KCRkcrNews7Tamilnews7TamilUpdatesProtest
Advertisement
Next Article