For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும் காசி விஸ்வநாதர் கோயில்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

12:20 PM Jul 23, 2024 IST | Web Editor
 உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும் காசி விஸ்வநாதர் கோயில்    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Advertisement

காசி விஸ்வநாதர் கோயில் உள்ளிட்டவை உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Advertisement

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.  ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது.

கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதன்முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை  தாக்கல் செய்தார்.

அப்போது, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் உள்ளிட்டவை உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், பீகார் மற்றும் புத்தகயா கோயில்கள் மேம்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

Tags :
Advertisement