கன்னியாகுமரி | மது போதையில் கம்பால் தாக்கிய காவலர் - தம்பதிக்கு ஏற்பட்ட விபரீதம்!
கன்னியாகுமரியில் மது போதையில் இருந்த காவலர் ஒருவர் கம்பால் தாக்கிய காவலர் ரத்தம் சொட்ட ஆண் படுகாயம் அடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே புத்தன் கடை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது குழந்தை மற்றும் மனைவியுடன் கிறிஸ்துமஸ் தினத்தின் முந்தைய நாளில் (டிச. 24) குடில்
மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோயில்களை பார்வையிட இரவு நேரம்
பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆற்றூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த கம்பால் வாகனத்தில் வந்த தம்பதியினரை தாக்கியுள்ளார்.
அப்போது, அந்த கம்பு நேராக வாகனம் ஓட்டிவந்தவரின் பின் தலையில் பட்டது. இதில் ரத்தம் சொட்ட அந்த நபர் சாலையில் சரிந்தார். இதைப் பார்த்து அங்கிருந்த ஊர் மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கம்பால் தாக்கிய அந்த காவலர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்த ஊர் மக்களுடன் தாக்குதளுக்கு ஆளானவரின் உறவினர்களும் இணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்பு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்ய சென்ற இவர்களிடமிருந்து புகாரை திருவட்டாறு
காவல்துறையினர் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசாரிடம் பொதுமக்கள் மற்றும் பெண்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.