"மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர் காமராஜர்" - செல்வப்பெருந்தகை புகழாரம்!
முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளான இன்று ஜூலை 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், இவரது புகழை போற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"காலத்தை வென்ற பெருந்தலைவர் காமராஜர். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுப் பணிக்கு தன்னை அர்ப்பணிப்பத்து, எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார்.
பெருந்தலைவர் என்றும், கிங் மேக்கர் என்றும், கல்விக் கண் திறந்தவர் என்றும் போற்றப்படும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாள் விழாவான இன்று கல்வித் திருவிழாவாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடுவோம்.
பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.