For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கள்ளக்குறிச்சி விவகாரம் | அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம்!

07:06 AM Jun 27, 2024 IST | Web Editor
கள்ளக்குறிச்சி விவகாரம்   அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம்
Advertisement

சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அ.தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி. ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் விஷச்சாரய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

மேலும், கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் குறித்து விவாதிக்க கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினரை சஸ்பென்ட் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்தும், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக MLAக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை ராஜரத்தினம் அரங்கம் முன்பு இன்று அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

Tags :
Advertisement