For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கலைமாமணி விருது – தமிழ் நாடு அரசுக்கு நடிகர் விக்ரம் பிரபு நன்றி..!

நடிகர் விக்ரம் பிரபு கலைமாமணி விருது அறிவித்துள்ள தமிழ் நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
05:06 PM Sep 27, 2025 IST | Web Editor
நடிகர் விக்ரம் பிரபு கலைமாமணி விருது அறிவித்துள்ள தமிழ் நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கலைமாமணி விருது – தமிழ் நாடு அரசுக்கு நடிகர் விக்ரம் பிரபு நன்றி
Advertisement

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றமானது இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி அவரிகளுக்கு கலைமாமணி விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா, அனிருத் உள்ளிட்டோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில் கலைமாமணி விருது அறிவித்துள்ள தமிழ் நாடு அரசுக்கு நடிகர் விக்ரம் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில்,

"வணக்கம், 2022 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதை தமிழக அரசிடமிருந்து பெறுவதில் நான் பெருமையும், பணிவும் அடைகிறேன். இந்த அங்கீகாரத்திற்காக அரசிற்கும், மதிப்பிற்குரிய நடுவர் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் குடும்பத்தினர், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சக ஊழியர்கள், நலம் விரும்பிகள் மற்றும் என் பார்வையாளர்கள் - உங்கள் நிலையான அன்பு மற்றும் ஊக்கத்திற்கு நன்றி. இந்த அங்கீகாரம் எனக்குச் சொந்தமானது போலவே உங்களுக்கும் சொந்தமானது. சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது, நான் தொடர்ந்து அதற்கு என் முழு பலத்தையும் கொடுப்பேன்"

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement