கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ பட டிரெய்லர் வெளியீடு...!
விஜய், சூர்யா, மகேஷ் பாபு போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். கடந்த 2018ஆம் ஆண்டு இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான நடிகையர் திலகம் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நவீன சரஸ்வதி சபதம் படத்தின் இயக்குநர் சந்துரு இயக்கியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் வருகிற 28-ம் தேதி வெளியாகும் அன்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் , ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Into the world of #RevolverRita 🔥#RevolverRitaTrailer
Tamil ▶️ https://t.co/mwTPY5kLRbTelugu ▶️ https://t.co/WZHAyogoEb@KeerthyOfficial @Jagadishbliss @Sudhans2017 @realradikaa @dirchandru @PassionStudios_ @TheRoute @RSeanRoldan @dineshkrishnanb @Cinemainmygenes… pic.twitter.com/98VfGw6SDO
— Passion Studios (@PassionStudios_) November 13, 2025