Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாஜகவில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியா..? யுவராஜ் சிங் விளக்கம்!

08:15 AM Mar 02, 2024 IST | Web Editor
Advertisement

பாஜகவில் இணைந்து, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பரவிய செய்திகளுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் முற்றுபுள்ளி வைத்துள்ளார்.  

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், பா.ஜனதாவில் இணைந்து வரும் மக்களவை தேர்தலில் பஞ்சாப்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதன்படி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் யுவராஜ் சிங் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக யுவராஜ் சிங், தனது மவுனத்தை கலைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஊடகங்களில் தவறான செய்திகள் வருகிறது. நான் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை. எனது ஆர்வம் என்பது வேறு விதமாக உள்ளது.

பல்வேறு திறமைகளை கொண்டவர்களுக்கு ஆதரவு வழங்குவதிலும், உதவுவதிலும் தான் உள்ளது. எனது YOUWECAN அறக்கட்டளையின் மூலம் அதனை தொடர்ந்து செய்வேன்" என்று அதில் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங்கின் இந்த அறிவிப்பை அவரது ரசிகர்கள் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

 

 

Tags :
BJPCricketGurdaspurLoksabha Elections 2024Nitin GadkariParliament Election 2024Yuvraj singh
Advertisement
Next Article