Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Jharkhand | காவலர் உடற்தகுதி தேர்வில் மயங்கி விழுந்து 11 பேர் உயிரிழப்பு!

09:04 AM Sep 03, 2024 IST | Web Editor
Advertisement

ஜார்க்கண்ட்டில் காவலர் பணிக்கான உடற்தகுதித் தேர்வின்போது 11 தேர்வர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காவல்துறையில் சுமார் 600 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான உடற்தகுதித் தேர்வு கடந்த மாதம் 22ம் தேதி 7 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் உடற்தகுதித் தேர்வில் கலந்துகொண்டவர்கள் பலர் திடீரென மயங்கி விழுந்தனர். அதில், ஜார்க்கண்ட்டின் பலமுவில் உள்ள மையத்தில் 4 பேர், கிரிதியில் உள்ள மையத்தில் 2 பேர், ஹஸாரிபாக்கில் உள்ள மையத்தில் 2 பேர், ராஞ்சி, மொசபானி, சாஹேப்கஞ்ச் பகுதியில் ஒருவர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.

அவர்கள் கடும் வெயிலில் அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட்டதால் உயிரிழந்தாக தெரிகிறது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் ஸ்டீராய்டு உள்ளிட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இளைஞர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்தார். இச்சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிப்பதாக அவர் தெரிவித்தார். கான்ஸ்டபில் பணிக்கான தேர்வை 3 நாள்களுக்கு ஒத்திவைக்கவும் அவர் உத்தரவிட்டார். மேலும், காலை 9 மணிக்கு பிறகு உடற்தகுதித் தேர்வை நடத்தக்கூடாது எனவும் ஹேமந்த் சோரன் அறிவுறுத்தியுள்ளார்.11 பேர் உயிரிழந்ததை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
deathHemant SorenJharkhandPhysical TestPolice
Advertisement
Next Article