For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை!

08:49 PM Dec 15, 2023 IST | Web Editor
ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் நகை  பணம் கொள்ளை
Advertisement

மேலப்புலம் புதூரில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டிலிருந்து 50 சவரன் நகையும், 10 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் திருடு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம்புதூரில் உள்ள காமராஜர்
நகரில் வசித்து வருபவர் ராமலிங்கம் (60). இவர் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர்
ஆவார்.இவருக்கு சரளா என்ற மனைவியும், பார்த்திபன், சதீஷ் என்கிற இரண்டு மகன்களும், சுதா என்கின்ற ஒரு மகளும் உள்ளனர். ராமலிங்கத்தின் பிள்ளைகள் மூவருக்கும் திருமணம் ஆகி ஆரணி பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி இருவரும் வழக்கம் போல் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், விவசாய வேலைக்காக காலை சென்றுள்ளனர். பின், வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும் பொழுது, வீட்டில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்றுள்ளனர். உள்ளே சென்று பார்த்த பொழுது, பூட்டிய கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்ட நிலையில் பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் சிதறி காணப்பட்டுள்ளது. பின்னர், பீரோவின் லாக்கரில் வைத்து இருந்த நகைகள், பணங்கள் திருடு போனது தெரியவந்துள்ளது. இதில், 50 சவரன் நகையும், 10 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் திருடு போனதாக கூறப்படுகிறது. உடனடியாக காவேரிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து
வருகின்றனர். பட்டப் பகலில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 50
சவரன் நகையும், 10 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் திருடு போன சம்பவம் அப்பகுதி
மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement