Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#JammuKashmir | போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் #JKNC வேட்பாளர் உமர் அப்துல்லா முன்னிலை!

10:15 AM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா முன்னிலை பெற்றுள்ளார்.

Advertisement

90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமாக 63.88 சதவீத வாக்கு கள் பதிவாகின. ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பதால் இத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இங்கு தேசிய மாநாடு கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், பாஜகவும், மக்கள் ஜனநாயக கட்சியும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளன. இத்தேர்தலில் காங்கிரஸ் – தேசிய மாநாடு கட்சி கூட்டணி பெரும்பான்மைக்கு சற்று குறைவாக 43 இடங்களிலும், பாஜக 27, மக்கள் ஜனநாயக கட்சி 7, மற்றவர்கள் 13 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

20 மையங்களில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி, ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி (இந்தியா கூட்டணி) முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா போட்டியிட்ட புத்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளார்.

Tags :
BJPINCINDIndiajammu kashmirJammu Kashmir Election ResultsJammu Kashmir ElectionsJKNJKPDPndaNews7Tamil
Advertisement
Next Article