For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போதைப் பொருள் வழக்கில் தேடப்படு வந்த ஜாபர் சாதிக் கைது!

12:20 PM Mar 09, 2024 IST | Web Editor
போதைப் பொருள் வழக்கில் தேடப்படு வந்த ஜாபர் சாதிக் கைது
Advertisement

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

Advertisement

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடோன் ஒன்றில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  சோதனையின் போது, குடோனில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மூவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

போதைப் பொருள் கடத்தலுக்கு திரைப்பட தயாரிப்பாளரும்,  திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதும்,  இவருக்கு துணையாக இவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோர் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.  மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலில் இவர்கள் ஈடுபட்டதும் தெரிய வந்தது.  இந்த செய்தி தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இதனைத் தொடர்ந்து திமுக தலைமை அவரை கட்சியிலிருந்து உடனடியாக நீக்கியது.

தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை பிடிக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வந்தனர்.  இதையடுத்து ஜாபர் சாதிக் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக்அவுட் நோட்டீஸை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்,  அனைத்து விமான நிலையங்களுக்கும்  கொடுத்திருந்தனர்.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக்கை கைது செய்திருப்பதாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஆனால்,  ஜாபர் சாதிக் எங்கு கைது செய்யப்பட்டார்? எப்போது கைது செய்யப்பட்டார்? என்ற விவரத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.  இருப்பினும் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது குறித்து இன்று பிற்பகல் 2 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும் என மத்திய போதைபொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement