For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்" - அமித்ஷா பேசியதற்கு மாணிக்கம் தாகூர் பதில்...

07:32 AM Apr 29, 2024 IST | Web Editor
 இது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்    அமித்ஷா பேசியதற்கு மாணிக்கம் தாகூர் பதில்
Advertisement

இட ஒதுக்கீடு குறித்து அமித்ஷா பேசியதற்கு விருதுநகர் மக்களவைத் தொகுதி
காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பதில் அளித்து வீடியோ ஒன்றை
வெளியிட்டுள்ளார்.

Advertisement

இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது, மத்திய உள்துறை அமைச்சர்
அமித்ஷா அவரது பேச்சு உண்மையில் ஆச்சரியம் அளிக்கிறது. இட ஒதுக்கீட்டுக்கு
ஆதரவாளர்கள் என்று அமித்ஷா பேசி இருப்பது பொய்யான தகவல். சில உண்மைகள்
இந்தியாவுடைய பொதுத்துறை நிறுவனங்கள் குறிப்பாக இந்தியாவுடைய ஏர்போர்ட், ஏர்
இந்தியா, இந்தியாவுடைய கப்பல் துறைமுகங்கள், இவை அனைத்திலும் ஓ பி சி, எஸ்சி
எஸ்டி பிரிவினர் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

அந்த பிரிவினரின் பணிகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. எப்பொழுது பொதுத்துறை நிறுவனங்களை அதானிக்கு தாரை வார்த்தார்களோ அப்போதே அங்கு ஓபிசி எஸ்சி எஸ்டி பிரிவு மக்களின் வேலைவாய்ப்பு இழந்து விட்டார்கள். இது நேரடியாக இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக்காக பார்க்க வேண்டும்.

இந்தக் கொடுமையை ஆர் எஸ் எஸ் செய்ய நினைக்கிறது. அந்தக் கொடுமையை பாஜகவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அமித்ஷா உடைய பொய்கள் தோற்கடிக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. ஜூன் 4 பிரதமர் மோடிக்கு ஓய்வு கொடுக்கும் நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement