For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கோயிலை கட்டுவதுதான் காங்கிரஸின் வழக்கம்,  இடிப்பது அல்ல" - செல்வப் பெருந்தகை பேட்டி..!

01:11 PM May 19, 2024 IST | Web Editor
 கோயிலை கட்டுவதுதான் காங்கிரஸின் வழக்கம்   இடிப்பது அல்ல    செல்வப் பெருந்தகை பேட்டி
Advertisement

கோயிலை கட்டுவதுதான் காங்கிரசின் வழக்கம்,  இடிப்பது அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

"நாடாளுமன்றத் தேர்தல் ஐந்தாம் கட்டத்தை நெருங்கி வருகிறது.  நான்கு கட்ட தேர்தல் சரியான முறையில் நடைபெற்றது.  நான்கு கட்ட தேர்தல் முடிவுக்குப் பிறகு தோல்வி பயத்தில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசி வருகிறார்.  பிரதமர் மோடி முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்.  மத அரசியல், சாதிய அரசியல்,மொழி அரசியல் செய்யக்கூடாது என்று அரசியல் சட்டம் உள்ளது.

பிரதமர் மோடி அரசியல் சட்டத்தை பின்பற்றாமல் சட்டத்துக்கு புறம்பாக பேசி வருகிறார்.  தற்போது கலவர அரசியலில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.  இவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து வருகிறது.  யார் வெறுப்பு அரசியல், பேசினாலும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவருடைய பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.  நாங்க எல்லோரும் ராமர் பக்தர்கள் தான்.  நாங்கள் எப்படி ராமர் கோயிலை இடிப்போம்.  நாங்கள் நாமமும் போடுவோம் பட்டையும் போடுவோம்.  100 சதவீதம் கோயிலை கட்டிய பிறகு தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என சட்டம் சொல்கிறது.

ஆனால் கட்டட பணி முடியாமலே ராமர் கோயிலை திறந்தார் பிரதமர் மோடி.  கோயிலை கட்டுவதுதான் காங்கிரஸின் வழக்கம், இடிப்பது அல்ல.  நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வழக்கில் கூடுதல் காவல் துறையை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தடவியல் நிபுணர்களோடு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  வழக்கு குறித்து இரண்டு நாட்களில் முக்கிய தகவல் கூறுவோம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என்றாலும் மாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். "

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement