"வேலையில்லா திண்டாட்டம் பாஜக அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது - ப.சிதம்பரம் விமர்சனம்!
வேலையின்மை பிரச்னைக்கு தீர்வு காண இயலாது என கூறுவது பாஜக அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது.
மார்ச் 20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து, வேட்புமனு தாக்கலுக்காக 6 நாள்கள் வழங்கப்பட்டன. அந்த வகையில், இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இதையடுத்து,
இந்த நிலையில், வேலையின்மை பிரச்னைக்கு மத்திய அரசால் தீர்வு காண இயலாது என அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"வேலையின்மை பிரச்னைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது பாஜக அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது. பாஜக அரசால் இயலாது என்றால் 'நாற்காலியைக் காலி செய்' என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும். வேலையின்மை பிரச்னைக்கு பல தீர்வுகள் உண்டு. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த வழிகளைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறோம்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வேலையில்லாமைப் பிரச்னைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவித்திருக்கிறார்
இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது பா ஜ க அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது
பா ஜ க அரசால் இயலாது என்றால் 'நாற்காலியைக் காலி செய்' என்று நாம் உரத்த குரலில்…
— P. Chidambaram (@PChidambaram_IN) March 27, 2024