For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரியை உயர்த்த ஒப்புக்கொண்டது அதிமுக அரசுதான்!” - அமைச்சர் சிவசங்கர்

08:11 PM Oct 08, 2024 IST | Web Editor
“ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரியை உயர்த்த ஒப்புக்கொண்டது அதிமுக அரசுதான் ”   அமைச்சர் சிவசங்கர்
Advertisement

ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரியை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்த போது அதற்கு ஒப்புக்கொண்டது அதிமுக அரசு தான் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,

"அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில்
இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களை
முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் தான் சொத்து வரி
உயர்த்தப்பட்டது என்பதை மறக்க கூடாது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா
எந்த திட்டத்தை எல்லாம் எதிர்த்தாரோ அவற்றை எடப்பாடி பழனிசாமி அனுமதித்தார்.

2019ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலையொட்டி சொத்து வரி திரும்ப பெறப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரியை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்த போது அதற்கு சம்பந்தம் தெரிவித்தது அதிமுக அரசு தான். விமான சாகசங்கள் நிகழ்வை மத்திய அரசு தான் நடத்தியது. வெயில் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அரசுக்கு எதிராக போராட்டங்களை அறிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

மக்களை திசை திருப்புவதற்காக செய்யும் போராட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறுத்தி கொள்ள வேண்டும். திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக அரசு மக்களுக்காக பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதற்கு அனைத்து தேர்தல்களிலும் திமுக கண்ட வெற்றியே சாட்சியாகும்.

வரும் 15 ம்தேதிக்கு மேல் ஆலோசனை நடத்தப்பட்டு தீபாவளி பண்டிகைக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து அறிவிக்கப்படும். விமான சாகச நிகழ்வின்போது வெப்பநிலை காரணமாக 5 பேர் உயிரிழந்தது உண்மை. மெரினாவில் 15 லட்சம் பேர் கூடும் போது அவர்கள் அனைவருக்கும் அரசே தண்ணீர் வழங்குவது என்பது சாத்தியமற்றது. 15 லட்சம் மக்கள் கூடுவார்கள் என்று விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசு வசமுள்ள ரயில்வே, மெட்ரோ துறைகள் மூலமாக அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள் என்ற ஒரு கேள்வி கூட எழவில்லை."

இவ்வாறு போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

Tags :
Advertisement