For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்பது முற்றிலும் தவறு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
08:48 AM Mar 05, 2025 IST | Web Editor
 இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்பது முற்றிலும் தவறு    முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சனம்
Advertisement

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், "இந்தி நம் நாட்­டின் தேசிய மொழி என்­றும் அதனை யாரும் புறக்­க­ணிக்­கக் கூடாது என்­றும் பாஜகவின­ரும் அவர்­க­ளின் கொள்கை வழி அமைப்­பி­ன­ரும் தொடர்ந்து சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். நாடா­ளு­மன்ற மக்­க­ள­வை­யின் தலை­வர் ஓம் பிர்லா சமஸ்­கி­ரு­தம்­ தான் பார­தத்­தின் மூல­மொழி என்று அவை­யி­லேயே குறிப்­பி­டு­கி­றார். இவை இரண்­டுமே தவ­றான பரப்­பு­ரை­யா­கும்.

Advertisement

இந்­திய ஒன்­றி­யத்­தின் அலு­வல் மொழி­தான் இந்தி. அத்­து­டன் ஆங்­கி­ல­மும் இணையலுவல் மொழி­யாக இருக்கி­றது. இந்­தி­தான் தேசிய மொழி என்­பது முற்­றி­லும் தவ­றா­னது. இந்­திய ஒன்­றி­யம் என்­பதே பல்­வேறு மொழி­வ­ழித் தேசிய இனங்­க­ளைக் கொண்­ட­தா­கும். இதனை இந்­திய விடு­த­லைக்கு முன்பே காந்­தி­ய­டி­கள் நன்கு உணர்ந்­தி­ருந்­தார்.

அத­னால் ­தான் மாகாண காங்­கி­ரஸ் கமிட்­டி­களை அந்­தந்த மாநி­லத் தாய்­மொ­ழி­க­ளின் பெய­ரில் அமைத்­தார். இந்­தியா விடு­த­லை­ய­டைந்­த ­பி­றகு, பிர­த­மர் ஜவ­கர்­லால் நேரு தலை­மை­யில் அமைந்­தி­ருந்த மத்திய அரசு, மாகா­ணங்­களை மொழி­வழி மாநி­லங்­க­ளா­கப் பிரிப்­ப­தற்­காக மாநில புன­ர­மைப்­புக் குழு­வினை அமைத்­தது. அந்­தக் குழு­வி­டம் பேர­றி­ஞர் அண்ணா தலை­மை­யி­லான திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தனது கருத்­து­களை அளித்­தது.

அதில், “மொழி­வ­ழிப் பிரி­வி­னையை திமுக பாராட்­டு­கி­றது. மொழி­வழி அமை­யும் ஒவ்­வொரு மாநி­ல­மும் அதன் முழு அதி­கா­ரத்­து­ட­னும் செயல்­பட வேண்­டும். நாடு என்­பது கூட்­ட­ர­சாக செயல்­பட வேண்­டும். சென்னை ராஜ்­ஜி­யம் ஏற்­­கனவே இருந்­த­படி தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம், கன்­ன­டம் ஆகிய நான்கு மொழி­ வ­ழிப் பிரி­வாக அமைப்­ப­து­தான் உட­ன­டித் தேவை. இத­னைச் செய்­யும்­போது, எந்­த­வொரு மொழிப்­பி­ரி­வும் மற்­றொரு மொழிப் பிரி­வின் நிலப்­ ப­ரப்பை அபக­ரித்­துக் ­கொள்­ளா­த­வாறு அதி­கா­ரத்­தில் உள்­ளோர் முழுக் கவ­னம் செலுத்த வேண்­டும்.

ராஜ்­ஜி­யங்­கள் திருத்தி அமைக்­கப்­பட வேண்­டி­யது நிலப்­ப­ரப்­பைப் பொறுத்து மட்­டு­மல்ல, ராஜ்­ஜி­யங்­க­ளுக்கு ஒதுக்­கப்­ப­டும் அதி­கா­ரங்­க­ளைப் பொறுத்­தும் மாறு­தல் வேண்­டும் என்­ப­தைத் திமுக வற்­பு­றுத்­து­கி­றது” என்று கருத்­து­ரு­வில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளில் சிலர் ‘தட்­சி­ணப் பிர­தே­சம்’ என்ற பெய­ரில் தென்­னிந்­திய மாநி­லங்­களை ஒரே அமைப்­பாக்­கிட முயற்சி செய்­த­போது, அத­னைக் கடு­மை­யாக எதிர்த்­தது திமுக. தென்­னிந்­தி­யா­விற்­குட்­பட்ட நிலப்­ப­ரப்பை மொழி­வழி மாநி­லங்­­களா­கத்­தான் பிரிக்­க­வேண்­டும் என்­ப­தில் திமுக உறு­தி­யாக இருந்­தது. பண்­டி­தர் நேரு தலை­மை­யி­லான அரசு தென்­னிந்­தி­யாவை மட்­டு­மல்ல, வட­இந்­தி­யப் பகு­தி­க­ளி­லும் மொழி­வழி மாநி­லங்­களை உரு­வாக்­கி­யது. இந்­தியா ஒற்றை மொழி பேசும் நாடு அல்ல. அது, பல்­வேறு மொழி­வ­ழித் தேசிய இனங்­க­ளைக் கொண்ட ஒன்­றி­யம் என்­பதை நமது அர­சி­யல் அமைப்­புச் சட்­டத்தை உரு­வாக்­கிய அண்ணல் அம்­பேத்­கர் உள்­ளிட்ட அறி­ஞர்­க­ளும், ஆட்­சி­யி­லி­ருந்த பண்­டி­தர் நேரு போன்ற பெரு­ம­கன்­க­ளும் உணர்ந்து செயல்­பட்­ட­னர்.

மொழி­யின் அடிப்­ப­டை­யில் பிரிக்­கப்­பட்ட மாநி­லங்­க­ளில் அந்­தந்த மாநி­லங்­க­ளின் தாய்­மொழி ஆட்சி மொழி­யாக உள்­ளது. அவை­யும் இந்த தேசத்­தின் மொழி­கள்­தான். அவற்­றை­யும் தேசிய மொழி­கள் என்ற அடிப்­ப­டை­யில் இந்­திய ஒன்­றி­யத்­தின் ஆட்சி மொழி­க­ளா­க - அ­லு­வல் மொழி­க­ளா­க­ ஆக்­கிட வேண்­டும் என்பதை திமுக நெடுங்­கா­ல­மாக வலி­யு­றுத்தி வரு­கி­றது.

1965ஆம் ஆண்டு நாடா­ளு­­மன்றத்தின் மாநி­லங்­க­ள­வை­யில் உரை­யாற்­றிய பேர­றி­ஞர் அண்ணா “இந்­தி­யா­வில் 100க்கு 40 பேர் இந்தி பேசு­வ­தா­கக்­கூறி, அத­னால் அதைத்­தான் ஆட்­சி­ மொ­ழி­யாக்க வேண்­டும் என்­கி­றார்­கள். 40 சத­வி­கி­தம் பேர் என்­பதை வாதத்­திற்­காக ஏற்­றுக்­கொண்­டா­லும், இந்தி ஒரு பகு­தி­யில் உள்ள மக்­க­ளால் பேசப்­ப­டு­கி­ற­தே­யன்றி, இந்­தியா முழு­வ­தும் பர­வ­லா­கப் பேசப்­ப­ட­வில்லை. ஒரு பகு­தி­யில் பெரும்­பான்­மை­யி­ன­ரால் பேசப்­ப­டு­வது, நாடு முழு­வ­தும் ஆட்சி மொழி­யா­வ­தற்­கா­னத் தகு­தி­யைப் பெற்­று­ வி­டாது.

மொழிப்­பி­ரச்­சி­னை­யில் திமுகவின் ­கொள்கை என்­ன­வென்­றால், இந்­தி­யா­வில் முக்­கிய மொழி­க­ளாக உள்ள 14 மொழி­க­ளும் தேசிய மொழி­க­ளாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு, ஆட்­சி­மொ­ழி­க­ளா­கும் தகுதி தரப்­ப­ட­வேண்­டும்” என்று வாதா­டி­னார்.

‘‘தி.மு.க.வின் நோக்­கம் இந்­தியை எதிர்ப்­ப­தல்ல, தமிழ் உள்­ளிட்ட இந்­திய மொழி­க­ளுக்கு சம­மான அங்­கீ­கா­ரம் வேண்­டும். இந்­திய ஒன்­றி­யத்­தின் ஆட்­சி­ மொ­ழி­க­ளா­க - அ­லு­வல் மொழி­க­ளாக அனைத்து மொழி­க­ளுக்­கும் இட­ ம­ளிக்க வேண்­டும்” என்று குறிப்­பிட்­டார்­கள். மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ராக அண்ணா இருந்­த­ கா­லத்­தில் எட்­டா­வது அட்­ட­வ­ணை­யில் 14 மொழி­கள் இருந்­தன. தற்­போது அது 22 ஆக உயர்ந்­துள்­ளது. மேலும் சில மொழிக­ளும் இந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெ­றக் காத்­தி­ருக்­கின்­றன. இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் எட்டாவது அட்­ட­வ­ணை­யில் இடம்­பெற்­றுள்ள தமிழ் உள்­ளிட்ட இந்­திய மொழி­கள் அனைத்­தும் இந்­தி­யா­வின் தேசிய மொழி­கள்­தான்.

இந்தி மட்­டுமே தேசிய மொழி என்­பது ஆதிக்­கத்­தின் வெளிப்­பாடு. சமஸ்­கி­ரு­தமே இந்­தி­யா­வின் மூல மொழி என்­பது நம்மை அடி­மை­யாக்­கும் முயற்சி. மூல­மொழி என்­றால் அதி­லி­ருந்­து­தான் மற்ற மொழி­கள் தோன்ற முடி­யும். அதா­வது, இந்­தி­யா­வில் உள்ள அத்­தனை மொழி­க­ளும் சமஸ்­கி­ரு­தத்­தி­லி­ருந்து உரு­வா­னது என நிறுவப் பார்க்­கி­றார்­கள். தமிழ் உள்­ளிட்ட திரா­விட மொழி­கள் தனித்­தன்மை கொண்­டவை என்­பதை ஏறத்­தாழ 175 ஆண்­டு­க­ளுக்கு முன்பே ஆய்­வுப்­பூர்­வ­மாக உல­கத்­திற்கு அறி­யச் செய்­த­வர் கால்­டு­வெல். இதனை 2010ஆம் ஆண்டு கோவை­யில் நடை­பெற்ற உல­கத் தமிழ் செம்­மொழி மாநாட்­டின்­போது வெளி­யிட்ட அறிக்­கை­யில் கலை­ஞர் குறிப்­பிட்­டுக் காட்­டி­யுள்­ளார்.

‘‘தமிழ்­மொழி செம்­மொ­ழி­யென முதல் குரல் கொடுத்த தமி­ழர் பரி­தி­மாற்­க­லை­ஞர் என்­றால், தமிழ்­மொழி செம்­மொ­ழி­யென்று முத­லில் சொன்ன வெளி­நாட்­ட­வர் ராபர்ட் கால்­டு­வெல் ஆவார். பரி­தி­மாற் கலை­ஞர் தமிழ்­மொழி செம்­மொ­ழி­யென 1887-ம் ஆண்டு குரல் கொடுத்­த­தற்கு 30 ஆண்­டு­க­ளுக்கு முன்பே, 1856ம் ஆண்டு அறி­ஞர் கால்­டு­வெல் தாம் எழு­திய ‘திரா­விட மொழி­க­ளின் ஒப்­பி­லக்­க­ணம்’ என்ற ஒப்­பு­வமை காண்­பித்­திட இய­லாத, உயர்­பெ­ரும் நூலில், ‘திரா­விட மொழி­கள் அனைத்­தி­லும் உயர்­த­னிச் செம்­மொ­ழி­யாய் நிலை­பெற்று விளங்­கும் தமிழ், தன்­னி­டையே இடம் பெற்­றி­ருக்­கும் சமஸ்­கி­ரு­தச் சொற்­களை அறவே ஒழித்­து­விட்டு உயிர் வாழ்­வ­தோடு, அவற்­றின் துணையை ஒரு சிறி­தும் வேண்­டா­மல் வளம் பெற்று வளர்­வ­தும் இய­லும்.

செந்­த­மிழ் என்­றும் தனித்­த­மிழ் என்­றும் சிறப்­பிக்­கப் பெறு­வ­தும், பெரும்­பா­லும் அம்­மொழி இலக்­கி­யங்­கள் அனைத்­தை­யும் எழு­தப் பயன்­ப­டு­வ­து­மா­கிய பழந்­த­மிழ் அல்­லது இயல்­த­மிழ், மிக மிகக் குறைந்த சமஸ்­கி­ரு­தத் தொடர்­பையே பெற்­றுள்­ளது. சமஸ்­கி­ரு­தச் சொற்­க­ளை­யும் எழுத்­து­க­ளை­யும் மேற்­கொள்­வதை வெறுத்து ஒதுக்­கி­விட்டு, பழந்­தி­ரா­விட தனிச்­சி­றப்பு வாய்ந்த மூலங்­கள், சொல்­லு­ரு­வங்­கள், ஒலி முறை­களை மட்­டும் மேற்­கொள்­வ­தில் காட்­டும் ஆர்­வத்­தை­யும் விழிப்­பு­ணர்ச்­சி யை­யும் விடா­மல் மேற்­கொண்­டி­ருப்­ப­தி­னா­லேயே அச்­செந்­தமிழ், தன் மொழி­யின் உரை­நடை, பேச்சு நடை­க­ளோடு சிறப்­பாக வேறு­படு­கி­றது என்று தமிழ்­மொழி செம்­மொ­ழியே என நிரூ­பித்­துக் காட்­டி­னார்” என கருணாநிதி தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

அறி­ஞர் ராபர்ட் கால்­டு­வெல் ஐரோப்­பிய இனத்­த­வர் என்று சொல்லி அவ­ரு­டைய கருத்­து­களை வெறுக்­கும் கூட்­டத்­தா­ரால், சூரி­ய­நா­ரா­யண சாஸ்­திரி என்ற பெய­ரைத் தனித்­த­மி­ழில் பரி­தி­மாற்­க­லை­ஞர் என மாற்­றிக்­கொண்டு தமிழ்த் தொண்­டாற்றி, உயர்­த­னிச் செம்­மொழி எனப் போற்­றிய அறி­ஞ­ரின் ஆய்­வு­களை ஒதுக்க முடி­யுமா? நாகர்­கள்-­­ தி­ரா­வி­டர்­கள் என்ற ஆய்­வின் அடிப்­ப­டை­யில் அண்­ணல் அம்­பேத்­கர் திரா­விட மொழியே தமிழ் என்­ப­தை­யும், ஆதிக்க மொழி­களி­ட­மி­ருந்து அது தன்­னைக் காத்­துக் கொண்­ட­தை­யும் விளக்­கி­யி­ருப்­ப­தைப் புறக்­க­ணிக்க முடி­யுமா?

சமஸ்­கி­ரு­தம்­தான் இந்­திய மொழி­க­ளுக்­குத் தாய்­மொழி என்று சொன்ன சங்­க­ராச்­சா­ரி­யார் அப்­ப­டி­யென்­றால் தமிழ்­தான் தந்தை மொழி என்ற வள்­ள­லா­ரின் வாதத்தை இந்­தக் கூட்­டத்­தார் மறுப்­பார்­களா? ஐரா­வ­தம் மகா­தே­வன் தொடங்கி உல­கத் தமிழ் ஆராய்ச்சி நிறு­வ­னத்­தின் தலை­வ­ரா­கப் பொறுப்­பேற்றி­ருக்­கும் ஆர்.பால­கி­ருஷ்­ணன் ஐ.ஏ.எஸ் வரை பல­ரும் அக­ழாய்­வு, செப்­பே­டு, ­­கல்­வெட்­டு, ஊர்ப்­பெ­யர்­கள் என எல்லா ஆய்­வு­க­ளி­லும் காலம் கால­மாக தமிழ் மொழி தனித்து இயங்­கும் தன்­மை­கொண்­டது என நிரூ­பித்­தி­ருப்­பதை மறுக்க முடி­யுமா?

தமிழ் மீது பிர­த­மர் மோடி மிகுந்த மதிப்பு வைத்­தி­ருக்­கி­றார் என்­றும், மாநில மொழி­க­ளின் வளர்ச்­சிக்­கா­கத்­தான் மும்­மொ­ழிப் பாடத்­திட்­டத்தை வலி­யு­றுத்­து­கிறோம் என்­றும் சொல்­கின்ற பாஜக வினர் தங்­கள் ஆட்­சி­யில் தமி­ழுக்கு எவ்­வ­ளவு நிதி ஒதுக்­கி­யி­ருக்­கி­றார்­கள்? சமஸ்­கி­ரு­தத்­திற்கு எவ்­வ­ளவு நிதி
ஒதுக்கி­யி­ருக்­கி­றார்­கள்? என்ற வேறு­பாடே, அவர்­கள் தமிழ்ப் பகை­வர்­கள்          என்­பதை வெளிச்­ச­மிட்­டுக் காட்­டி­வி­டும்.

மத்திய கல்வி அமைச்­ச­கத்­தி­ட­மிருந்து பெறப்­பட்ட புள்­ளி­ வி­வ­ரங்க­ளின் அடிப்­ப­டை­யில் 2014ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை­யி­லான 10 ஆண்டு கால­கட்­டத்­தில் மத்­திய சமஸ்­கி­ரு­தப் பல்­க­லைக்­க­ழ­கம், தேசிய சமஸ்­கி­ரு­தப் பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றுக்கு ஒதுக்­கப்­பட்ட தொகை ரூ.2ஆயிரத்து 435 கோடி. இதே கால­கட்­டத்­தில் மத்­திய செம்­மொ­ழித் தமி­ழாய்வு நிறு­வ­னத்­திற்கு மத்திய அரசு ஒதுக்­கி­யது ரூ.167 கோடி மட்­டுமே. சமஸ்­கி­ரு­தத்­திற்கு செல­வி­டப்­பட்­ட­தில் 7 விழுக்­காடு மட்­டுமே தமி­ழுக்கு செல­வி­டப்­பட்­டுள்­ளது.

சமஸ்­கி­ரு­தத்­திற்­கும் இந்­திக்­கும் முன்­பை­விட பல மடங்கு பணம் ஒதுக்­கப்­பட்டு, செல­வி­டப்­பட்டு வரு­கி­றது. ஓட்­டுக்­காக உதட்­ட­ள­வில் தமிழை உச்­ச­ரித்து, உள்­ள­மெங்­கும் ஆதிக்க மொழி­யு­ணர்வு கொண்டு செயல்­ப­டு­கி­றது மத்திய அரசு. தமிழ் உள்­ளிட்ட மாநில மொழி­க­ளைப் பேசு­ப­வர்­களை இரண்­டாந்­தர குடி­மக்­க­ளாக நடத்த முயற்­சிக்­கி­றது.

தமிழ்­நாட்­டுக்­கு­ரிய நிதி­யைத் தரா­மல் வஞ்­சிப்­பது போலவே தமி­ழுக்­குரிய நிதி­யை­யும் ஒதுக்­கா­மல் ஒன்­றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து வஞ்­சித்து வரு­கி­றது. தமி­ழைப் போலவே இந்­தி­யா­வின் பிற மாநில மொழி­க­ளை­யும் ஆதிக்க மொழி­க­ளைக் கொண்டு அழிக்­கத் துடிக்­கி­றது. மொழித் திணிப்பு ஒரு நாட்­டில் எத்­த­கைய
விளை­வு­களை உண்­டாக்­கும் என்­பதை உலக சரித்­தி­ரத்­தைப் புரட்­டி­னால் புரிந்­து ­கொள்­ள­லாம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement