‘வங்கதேசத்தில் இந்துக்கள் இனப்படுகொலை’ என வைரலாகும் மனித உடல்களை எரிக்கும் வீடியோ உண்மையா?
This News Fact Checked by BOOM
‘வங்கதேசத்தில் இந்துக்கள் இனப்படுகொலை’ என மனித உடல்களை எரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
சீனாவில் உள்ள தீம் பார்க்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹாலோவீன் பார்ட்டியின் போது மரத்தடியில் இரண்டு உடல்களை கட்டிவைத்து தீ வைக்கும்படியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வங்கதேசத்தில் இந்துக்களின் இனப்படுகொலை என பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து BOOM ஆய்வு செய்ததில் வைரலான வீடியோ தவறானது என்பதை கண்டறிந்தது. சீனாவின் ஜுஹாய் நகரில் உள்ள சிமெலாங் ஓஷன் கிங்டம் தீம் பார்க்கில் நடைபெற்ற ஹாலோவீன் விருந்தின் போது இரண்டு உடல்கள் எரிக்கப்படுவதை வீடியோ காட்டுகிறது.
ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு வங்கதேசத்தில் வகுப்புவாத பதற்றம் காணப்படுகிறது. 2024 நவம்பர் 25 அன்று இந்து துறவி சின்மயி கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. வங்கதேசத்தில் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதாக இந்தியாவில் உள்ள வலதுசாரி குழுக்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த 7 வினாடி வைரல் வீடியோவில், 2 மனித உடன்கள் ஒரு மரத் துண்டில் கட்டப்பட்டு எரியும் நெருப்பில் தொங்கவிடப்பட்டுள்ளன.
ஒரு பயனர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து, “அனைத்து இந்துக்களும் மற்றும் இந்தியாவின் அனைத்து மத்திய மற்றும் மாநில அரசுகளும் திறந்த கண்களுடன் பார்க்க வேண்டும். வங்கதேசத்தில் இந்து சகோதர, சகோதரிகளின் சித்திரவதை உச்சத்தை எட்டியுள்ளது. இதை முடிந்தவரை பலரிடம் பரப்புங்கள். இதனால் இந்துக்கள் சாதி அடிப்படையில் பிளவுபட்டு, தேர்தலில் மும்முரமாக இருக்கும் அரசுகள் நிம்மதியாக உறங்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
உண்மை சரிபார்ப்பு:
சீனாவில் உள்ள தீம் பார்க் வீடியோ
சீனாவில் உள்ள ஒரு தீம் பார்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹாலோவீன் பார்ட்டியின் வைரலான வீடியோவை BOOM கண்டறிந்தது.
வைரலான வீடியோவை ஆராய, கூகுள் லென்ஸைப் பயன்படுத்தி வீடியோவின் சில ஃப்ரேம்களை தேடியபோது, இந்த வீடியோ பழையது மற்றும் வங்கதேசத்துடன் தொடர்புடையது அல்ல என தெரியவந்தது.
ஹைட்டி மற்றும் நைஜீரியாவில் நரமாமிசம் நடப்பதாக தவறான கூற்றுடன் பகிரப்பட்ட வீடியோ
நவம்பர் 2024 இல் ட்விட்டர் (எக்ஸ்) இல் இதே வீடியோ வைரலாகி இருப்பது கண்டறியப்பட்டது. இது ஹைட்டியில் நரமாமிசம் என்ற தவறான கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டரில் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக, மக்கள் இந்த கோரிக்கையை போலி என கமெண்ட் செய்கின்றனர். இதனுடன், மலேசியாவைச் சேர்ந்த சீன மொழிச் செய்தி நிறுவனமான சின் செவ் டெய்லியின் உண்மைச் சரிபார்ப்பு அறிக்கையும் பகிரப்பட்டது.
இந்த ஜனவரி 2020 கட்டுரையில், வைரலான வீடியோ 2018-ம் ஆண்டு சீனாவின் ஜுஹாயில் உள்ள சிமெலாங் ஓஷன் கிங்டம் தீம் பூங்காவில் நடைபெற்ற ஹாலோவீன் பார்ட்டியில் இருந்து வந்தது என்று தெரியவந்தது. வைரல் வீடியோவின் முக்கிய சட்டத்தையும் இந்தக் கட்டுரையில் காணலாம். நைஜீரியாவில் உள்ள ஒரு உணவகத்தில் நரமாமிசம் உண்ணும் சம்பவத்தின் தவறான கூற்றுடன் அதே வீடியோவும் அந்த நேரத்தில் பகிரப்பட்டது.
சீனாவில் உள்ள சிமெலாங் ஓஷன் கிங்டம் தீம் பார்க் ஹாலோவீன் பார்ட்டியின் வீடியோ
சைமலாங் ஓஷன் கிங்டம் தீம் பார்க் சீனாவின் ஜுஹாய் நகரில் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து க்யூ எடுத்து, அக்டோபர் 31, 2018 அன்று இன்ஸ்டாகிராமில் இதேபோன்ற வீடியோ பகிரப்பட்டது கண்டறியப்பட்டது. இதிலும், வைரல் வீடியோவில் உள்ள அதே அமைப்பை காணலாம். அந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு உடலை குச்சியால் ஆட்டுவது போல் தெரிகிறது.
Instagram கணக்கு @galaxychimelong தீம் பூங்காவின் மற்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டு, "Chimelong Ocean Kingdom" என இடம் குறிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 17, 2018 அன்று ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ சில்லிநானோமாக் இல் பகிரப்பட்டது. அதில், சுற்றுலாப் பயணிகள் ஒரு மனித உடலை குச்சியால் ஆடுவதை காணலாம். இது தீம் பார்க்கில் ஹாலோவீன் பார்ட்டிக்கான செட்டப் என்று கூறுகிறது. வீடியோவில் உள்ள 42 வினாடிகளின் நேர முத்திரையிலிருந்து இதைக் காணலாம்.
இது தவிர, 'Halloween party at Chimelong Ocean Kingdom' என்ற முக்கிய வார்த்தைகளுடன் தேடும் போது, YouTube இல் அக்டோபர் 2018 இன் இணைய பக்கம் ஒன்றும் கிடைத்தது. அதில் வைரல் வீடியோவுடன் பொருந்தக்கூடிய இந்த தீம் பார்க்கின் காட்சிகள் உள்ளன.
Note : This story was originally published by ‘BOOM’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.