காங்கிரஸின் “மகாலட்சுமி திட்டம்” குறித்து வைரலாகும் வீடியோ உண்மையா?
This News Fact Checked by ‘Boom'
2022-ம் ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு Prega News சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தை காங்கிரஸின் “மகாலட்சுமி திட்டம்” குறித்த பிரசாரம் என்று தவறாக பகிரப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கையில் மகாலட்சுமி திட்ட உத்தரவாதத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், குடும்பத்தின் மூத்த பெண்ணின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த திட்டம் குறித்து வைரலான வீடியோவில், ஒரு குழு பெண்கள் தங்கள் தொழில் மற்றும் தாய்மையை சமநிலைப்படுத்துவதில் உள்ள சவால்களைப் பற்றி பேசும்படி அமைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் சார்பில் மகாலட்சுமி திட்ட உத்தரவாதம் குறித்து வெளியான வீடியோவில் ராகுல் காந்தி, “மக்களவை தேர்தலுக்கு பிறகு மத்தியில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் உறுதியளித்துள்ளது” என தெரிவிக்கிறார்.
வைரலான முழு வீடியோவின் ஒரு பகுதியான 1.14 நிமிடத்தில் இருந்து வீடியோவை மட்டும் Amockxi FC (@Amockx2022) என்ற ட்விட்டர் (எக்ஸ்) கணக்கில் பகிர்ந்து, "BREAKING NEWS: மகாலக்ஷ்மி திட்டத்தில் காங்கிரஸ் புதிய கடினமான பிரசார விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. பிரசாந்த் கிஷோர் இதுபோன்ற அற்புதமான விளம்பரங்கள் மற்றும் திட்டங்களைப் பற்றி ஒருபோதும் குறிப்பிட மாட்டார். ஆனால் பலவீனமான எதிர்ப்பைப் குறித்து பேசி அழுவார்” என தலைப்பிடப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு:
வைரலான இந்த வீடியோ 2022-ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி Prega News-ல் வெளியிடப்பட்ட விளம்பர பிரசாரம் என்றும், #SheCanCarryBoth என்ற ஹேஸ்டேகுடன் இந்த செய்தி பகிரப்பட்டுள்ளது எனவும் BOOM கண்டறிந்துள்ளது.
வீடியோவை கீ-ஃபிரேம்களாக உடைத்து, கூகுளைப் பயன்படுத்தி தலைகீழ் படத் தேடல் செய்யப்பட்டது. மேலும் வைரலான வீடியோ ப்ரீகா நியூஸின் விளம்பரத்திலிருந்து வந்ததாகக் கண்டறியப்பட்டது. இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக்கொண்டு, பிப்ரவரி 2022 இல் Prega News இன் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்பட்ட அசல் விளம்பரம் கண்டறியப்பட்டது.
"அம்மாவாக இருப்பது மிகவும் பலனளிக்கிறது. ஆனால் அது உங்கள் லட்சியங்களையும், கனவுகளையும் எப்போதாவது பாதிக்குமா? இந்த மகளிர் தினத்தை ப்ரீகா நியூஸ்-உடன் சமூகத்தின் தவறான கருத்துக்களில் இருந்து விடுபட்டு, பெண்களுக்கு நம்பிக்கையைக் கொண்டுவருவதற்கான நேரம் இது” என Prega News சார்பில் யூடியூபில் கிடைத்தது.
வைரல் வீடியோவில் உள்ள பகுதியை (40 வினாடியில் இருந்து 1.15 நிமிடம் வரை) எடுத்துக்கொண்டு, இதற்குப் பிந்தைய பகுதியாக காங்கிரஸ் கட்சியின் மகாலட்சுமி திட்ட விளம்பரம் என்று பொய்யாக எடிட் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
முடிவு:
காங்கிரஸ் கட்சி தனது யூடியூப் சேனலில் மஹாலக்ஷ்மி திட்டத்தை பற்றி பல விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இவை வைரலான வீடியோவுடன் பொருந்தவில்லை என்பது கண்டறியப்பட்டது.
Note : This story was originally published by ‘Boom’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.