Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காங்கிரஸ் மூத்த தலைவர் சுதாகரன், ஆளுநர் ஆக ஆர்வம் காட்டினாரா?

03:29 PM May 28, 2024 IST | Web Editor
Advertisement

This news fact checked by 'Newsmeter'

Advertisement

கேரள காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான கே.சுதாகரன் ஆளுநர் ஆவதற்கு ஆர்வம் காட்டினார் என வைரலாகி வரும் ஏசியா நெட் செய்தியின் பதிவு தவறான தகவல்களுடன் பகிரப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

2001-2004-ம் ஆண்டுகளில் கேரளாவில் வனத்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சுதாகரன். இவர் தற்போது கண்ணூர் தொகுதியின் எம்பியாகவும், கேபிசிசி (கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி) தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் கேரள ஆளுநர் ஆவதில் ஆர்வம் காட்டுவதாக ஏசியாநெட் செய்தி நிறுவனத்தின் பதிவு ஒன்று பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால் பாஜகவில் இணைந்ததை அடுத்து, சுதாகரனும் பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், ஏசியாநெட் நியூஸ் என்ற பெயரில் பகிரப்படும் பதிவு போலியானது என்றும், ஆதாரமற்ற பிரசாரம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

உண்மை சரிபார்ப்பு:

இதுதொடர்பான, உண்மைச் சரிபார்ப்பின் போது, ஆரம்ப கட்டங்களில் புழக்கத்தில் இருந்த பதிவு திருத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கான பல அறிகுறிகள் தெரியவந்தன.  வைரலாகும் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள முக்கிய எழுத்து ஏசியாநெட் நியூஸ் சாதாரணமாக பயன்படுத்தும் எழுத்து அல்ல என்பது முதலில் கண்டறியப்பட்டது. அந்த பதிவில் முக்கியமான வார்த்தைகள் திருத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

மேலும் அந்த பதிவில் தேதியிட்ட பகுதி சரியான விகிதத்தில் இல்லை. எனவே, பதிவில் கொடுக்கப்பட்ட தேதியான 24 மே 2024 அன்று ஏசியாநெட் நியூஸ் பகிர்ந்த பதிவுகள் சரிபார்க்கப்பட்டன. இதன் மூலம், அசல் பதிவு கிடைத்தது. அசல் பதிவில், கலால் லஞ்ச புகார் தொடர்பாக அமைச்சர் எம்.பி.ராஜேஷுக்கு எதிராக கே.சுதாகரன் கூறியது குறித்து ஏசியாநெட் நியூஸ் தயாரித்த செய்தி அட்டையின் வாக்கியங்களையும், பின்னணியையும் எடிட் செய்துள்ளது தெரியவந்தது.

எனவே, புழக்கத்தில் இருப்பது எடிட் செய்யப்பட்ட பதிவு என்பது தெளிவாகிறது. சுதாகரன் மார்ச் 2024ல் பாஜகவில் சேரப் போவதாக வதந்தி பரவியது. அந்த வதந்திக்கு சுதாகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், சுதாகரன் ஆளுநராக விருப்பம் தெரிவித்ததாக எந்த ஊடக அறிக்கையும் கிடைக்கவில்லை.

முடிவு:

கேபிசிசி தலைவர் சுதாகரன் ஆளுநராக விருப்பம் தெரிவித்ததாக ஏசியாநெட் செய்தி சார்பில் பகிரப்பட்ட பதிவு எடிட் செய்யப்பட்டது மற்றும் தவறான தகவல்களுடன் வைரலாகி வருவதாக நியூஸ்மீட்டர் விசாரணையில் கண்டறியப்பட்டது.

Note : This story was originally published by 'Newsmeter' and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
CongressFact CheckGovernorK SudhakaranKeralaKPCCMB RajeshNews7Tamilnews7TamilUpdatesPadmaja Venugopal
Advertisement
Next Article