Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அபு சலீமுடன் கங்கனா ரணாவத் இருக்கும் புகைப்படம்? - உண்மை என்ன?

03:23 PM May 29, 2024 IST | Web Editor
Advertisement

This news fact checked by ‘Logically Facts

Advertisement

நடிகை கங்கனா ரனாவத் குற்றவாளி அபு சலீமுடம் இருக்கும் புகைப்படம் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது முன்னாள் பத்திரிக்கையாளர் என கண்டறியப்பட்டுள்ளது.

1993 மும்பை குண்டுவெடிப்பில் குற்றவாளி என கைது செய்யப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளி அபு சலீமையும்,  இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதி பாஜக வேட்பாளரும்,  நடிகையுமான கங்கனா ரணாவத்தையும் தொடர்பு படுத்தும் வகையில் பல பயனர்கள் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். வைரலான இந்த பதிவில், “நாட்டின் எதிரியான அபு சலீமுடன் கங்கனா ரணாவத் சில மறக்க முடியாத தருணங்கள்” என்று இந்தியில் தலைப்பிடப்பட்டிருந்தது.

மக்களவைத் தேர்தலின் 7வது (இறுதி) கட்டத் தேர்தல் வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக கங்கனா வேட்பாளராக போட்டியிடும் மண்டி தொகுதியிலும் அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த படத்தைப் பகிர்ந்த ஒரு ட்விட்டர் (எக்ஸ்) பயனர்,  “சகோதரி, ‘அபு சலீமுடன்’ சில மறக்கமுடியாத தருணங்களைச் செலவிடுகிறார்” என இந்தியில் தலைப்பிட்டுள்ளார். இந்த பதிவு 57,000 பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

உண்மை சரிபார்ப்பு:

இன்ஸ்டாகிராமில் கங்கனா ரணாவத்தின் சமீபத்திய தெளிவுபடுத்தலைப் பற்றி பல செய்தி நிறுவனங்கள் அறிக்கை செய்துள்ளன. அதன்படி, முன்னாள் பத்திரிகையாளர் மார்க் மானுவலுடன் அவரது புகைப்படம் குற்றவாளி அபு சலீமுடன் புகைப்படம் எடுக்கப்பட்டதாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தக் குறிப்பை எடுத்துக் கொண்டு, 'மார்க் மானுவல்' என்று கூகுளில் தேடப்பட்டது. அவருடைய இன்ஸ்டாகிராம் மற்றும் முகப்புத்தக கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. அதன் மூலம், மார்க் மானுவல் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முன்னாள் ஆசிரியர் என்பது கண்டறியப்பட்டது. அவர் மிட்-டே பத்திரிகையின் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் ஹஃப்போஸ்ட் ஆகியவற்றில் கட்டுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மார்க் மானுவல், செப்டம்பர் 15, 2017 அன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கங்கனா ரனாவத்... லவ், செக்ஸ் அண்டு பிட்ரேயல். எனது முகநூல் பக்கத்தில் படியுங்கள்” என தலைப்பிட்டு தற்போது வைரலாகும் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதே படத்தை அதே நாளில் அவர் முகப்புத்தக பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதன் தலைப்பில், “இன்று வெளியாகும் கங்கனாவின் ‘சிம்ரன்’ படத்தைக் கொண்டாட ஷாம்பெயின் பார்ட்டி" என்று பதிவிட்டிருந்தார்.

அவரது பேஸ்புக் கணக்கின் மீதான மேலும் விசாரணையில், அவர் அக்டோபர் 2023 இல் அதே படத்தை சில செய்தி தலைப்புகளின் ஸ்கிரீன்ஷாட்களுடன் பகிர்ந்துள்ளார் என்பது தெரிய வந்தது. 2 023-ம் ஆண்டு மார்க் மானுவல் பகிர்ந்த புகைப்படம் வைரலானது என்பது கண்டறியப்பட்டது.

https://www.facebook.com/mark.manuel.332/posts/10154846574685911?ref=embed_post

படத்தின் தெளிவுபடுத்தலில், 2017-ம் ஆண்டு ஹஃபிங்டன் போஸ்ட் கட்டுரையில் கங்கனா ரணாவத் தன்னுடன் இருக்கும் புகைப்படம் பல காங்கிரஸ் உறுப்பினர்களால் குற்றவாளி அபு சலீமுடன் அமர்ந்திருப்பதாக கூறி பரப்பப்படுகிறது என மார்க் மானுவல் விளக்குகிறார். மேலும் 2002-ம் ஆண்டு முதல் அபு சலீம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை மார்க் மானுவல் சுட்டிக்காட்டியுள்ளார்.

அக்டோபர் 1, 2023 அன்று, ரனாவத் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “தனக்கு அருகில் இருக்கும் நபர் குற்றவாளி அபு சலீம் அல்ல, பத்திரிகையாளர் மார்க் மானுவல். மும்பை பாரில் என்னுடன் சாதாரணமாக சுற்றிக் கொண்டிருக்கும் பயங்கரமான கேங்க்ஸ்டர் அபு சலீம்” என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் உண்மையில் நினைக்கிறார்கள் என்று நான் நம்பவில்லை. அவர் முன்னாள் டைம்ஸ் ஆஃப் இந்தியா என்டர்டெயின்மென்ட் எடிட்டர். அவர் பெயர் மார்க் மானுவல்" என்று பகிர்ந்துள்ளார்.

முடிவு:

வைரலான புகைப்படத்தில் மண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத்துடன் புகைப்படத்தில் இருப்பவர் அபு சலீம் அல்ல எனவும், மார்க் மானுவல் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘Logically Facts‘ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Abu SalemBJPCongressElections2024Fact CheckKangana RanautLoksabha Elections 2024Mark ManuelNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article