For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சிறுமியிடம் அத்துமீறிய காங்கிரஸ் கட்சி தலைவரை தாக்கிய பெண்கள்” என்று பரவும் தகவல் உண்மையா?

01:12 PM May 27, 2024 IST | Web Editor
“சிறுமியிடம் அத்துமீறிய காங்கிரஸ் கட்சி தலைவரை தாக்கிய பெண்கள்” என்று பரவும் தகவல் உண்மையா
Advertisement

This News Fact Checked by ‘Fact Crescendo

Advertisement

ஹரியானாவில் சிறுமியிடம் காங்கிரஸ் கட்சி தலைவர் அத்துமீறியதாகவும், அதனால் அவர் அங்குள்ள பெண்களால் தாக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ உண்மை இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

‘’சிறுமியிடம் அத்துமீறிய காங்கிரஸ் கட்சி தலைவரை தாக்கிய பெண்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  இதனை Fact Crescendo - வின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்பி,  உண்மையா என்று வாசகர்கள் கேள்வி எழுப்பினர். எனவே, இதன் உண்மை தன்மையை அறிந்துகொள்ள Fact Crescendo சார்பில் முடிவு செய்யப்பட்டது.

வைரலாகும் வீடியோ பதிவில், “காத்து வாக்குல வந்த செய்தி :  ஹாரியானவில் சிறுமியிடம் தவறாக நடந்த காங்கிரஸ் கட்சி தலைவரை புரட்டி எடுத்த பெண்கள்’’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

உண்மை சரிபார்ப்பு:

வீடியோ தொடர்பாக, தகவல்கள் சேகரிக்கும்போது, கடந்த 2021-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக விவரம் கிடைத்தது. 

மேலும், இமாச்சலப் பிரதேசம், மண்டி மாவட்டத்தின் கோட்லி தாலுகாவிற்கு உட்பட்ட சர்வால் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. அங்கு நடைபெற்ற சாலை விரிவாக்கப் பணி தொடர்பாக நிலத்தின் உரிமையாளருக்கும், மகிளா அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக செய்திகளில் கூறப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதன்பேரில் Fact Crescendo சார்பில் Kotli Chowki போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளப்பட்டது. அப்போது, பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “இது பாலியல் குற்றம் காரணமாக நிகழ்ந்த மோதல் கிடையாது. சாலை விரிவாக்கப் பணி ஒன்று தொடர்பாக நடைபெற்ற மோதல். அப்போதே, இரு தரப்பும் புகார் செய்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். உண்மை தெரியாமல், சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பற்றி தவறான தகவலை யாரும் பகிர வேண்டாம்” என தெரிவித்தார்.

முடிவு:

எனவே, 2021-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் நடந்த சம்பவத்தை, ஹரியானாவில் பாலியல் குற்றம் காரணமாக நிகழ்ந்த மோதல் என்று கூறி வதந்தி பரப்புவதாக சந்தேகமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘Fact Crescendo’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement