For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிமுகவினர் முன் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ போடுவது சரியா?- பதிலை தவிர்த்த நயினார் நாகேந்திரன்!

அதிமுகவினர் முன் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ போடுவது சரியா? என்ற கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலை தவிர்த்தார்.
05:08 PM Jun 23, 2025 IST | Web Editor
அதிமுகவினர் முன் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ போடுவது சரியா? என்ற கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலை தவிர்த்தார்.
அதிமுகவினர் முன் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ போடுவது சரியா   பதிலை தவிர்த்த நயினார் நாகேந்திரன்
Advertisement

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மதுரை மாநாட்டிற்கு திமுக யாரும் வர மாட்டார்கள் என சொன்னது. ஆனால் மாநாட்டிற்கு முதல் நாள் மூன்று லட்சம் பேர் வந்திருந்தார்கள். நேற்று மாநாட்டின் பொழுது 5 லட்சம் பேர் வந்தார்கள். சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் நடந்து முடிந்தது. காவல்துறையினர் ஒருவர் கூட அந்த வளாகத்தில் இல்லை. அனைவரும் கட்டுப்பாட்டுடன் இருந்து மாநாட்டில் பங்கேற்று திரும்பினர் தோல்வி பயத்தில் திமுகவினர் தற்பொழுது பேசிக் கொண்டு இருக்கின்றனர்.

Advertisement

அண்ணா குறித்து மாநாட்டில் வீடியோ வெளியிட்டது வருத்தம் அளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அது அவர்கள் சொல்லியிருக்கின்றனர்” என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “திமுகவினர் நாங்கள் செய்யாததை தான் பேசிக் கொண்டு இருப்பார்கள். நேற்றைய மாநாட்டில் பக்தி, பாடல்கள், நடனம், பரத நாட்டியம் தான் நடந்தது” என்றார்.

பின்னர் அதிமுகவில் வருத்தத்தை சாதாரணமாக பாஜக எடுத்து கொள்கின்றதா? என்ற கேள்விக்கு, அவர், “அதை நான் இன்னும் பார்க்கவில்லை. அதை பார்த்துவிட்டு கண்டிப்பாக பேசுகிறேன்” என்றார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ போடுவது சரியா? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தபோது, “நேற்று நிகழ்ச்சி முடிந்தவுடன் இங்கு வந்து விட்டோம். அது என்னவென்று பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன்” என்றார். திருமாவளவன் திருநீறை அழித்தது தொடர்பாக கேள்விக்கு, “அதை நீங்கள் நம்புகின்றீர்களா?” என நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

Tags :
Advertisement