எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை.. போக்சோ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த போலீசார் விசாரிக்க தொடங்கினர்.
இதுகுறித்து எடியூரப்பா தன் மேல் பதியப்பட்டுள்ள போஸ்கோ வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுதாக்கல் செய்தார். மேலும் அவர் அளித்த அந்த மனுவில் தன் மீது பொய்யான புகார்கள் அளிக்கப்பட்டிருக்கிறது என்றும், ஏற்கனவே இது போன்ற சில பொய்யான புகார்கள் தனது மீது சுமத்தப்பட்டு இருப்பதாகவும், அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் ஏற்கனவே இது போன்ற விவரங்கள் தொடர்பாக நான் நீதிமன்றத்தில் ஆஜராகியும், என் குரல் மாதிரிகளை மட்டும் சேமித்து விட்டு என்னை அனுப்பி விட்டார்கள். என்னிடம் விசாரணை ஏதும் நடத்தப்படவிலை எண்டுறம் அவர் கூறினார்.
இந்த சூழலில் தான் புகார் கொடுத்த அந்த 16 வயது சிறுமியின் தாய் திடீரென ஒரு நாள் மரணமடைந்தார். நுரையீரல் புற்றுநோய் காரணமாகத்தான் அவர் இறந்ததாகவும் தகவல்கள் வெளியானது. அதன் பிறகு அந்த சிறுமியின் சகோதரர் தொடர்ச்சியாக இந்த வழக்கில் நீதி கேட்டு நீதிமன்றம் சென்ற நிலையை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் அந்த வழக்கில் இடையூறப்பாவிற்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்யக் கூடாது என்றும், வழக்கு அடுத்த விசாரணைக்கு வரும் வரை எடியூரப்பாவை கைது செய்ய தடை விதிப்பதாகவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எடியூரப்பா வருகின்ற 17-ம் தேதி காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அந்த விசாரணைக்கு ஆஜரான பின்பு நீதிமன்றத்தில் காவல்துறை மீண்டும் மனு தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.