டாஸ் வென்ற இந்திய அணி - பேட்டிங்கை தேர்வு செய்த ரோஹித் சர்மா!
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2 வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
இதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் பகல் – இரவு ஆட்டமாக இன்று தொடங்கியது. மேலும் பகல் – இரவு ஆட்டம் என்பதால் இந்திய அணியின் அனுபவ வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச உள்ளது. தொடர்ந்து இந்திய அணியில் 3 மாற்றங்களாக துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் படிக்கல் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் அஸ்வின் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.இந்த நிலையில் ஆட்டம் தொடங்கியவுடன் மிட்செல் ஸ்டார் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் முதல் பந்தில் கோல்டன் டக் அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்