For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"திமுகவை பின்பற்றினால் இந்தியாவே பாராட்டப்படும்" - மநீம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை!

09:30 PM Apr 02, 2024 IST | Web Editor
 திமுகவை பின்பற்றினால் இந்தியாவே பாராட்டப்படும்    மநீம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை
Advertisement

திமுகவை பின்பற்றினால் இந்தியாவே பாராட்டப்படும் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தார்.

Advertisement

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,

“நமது ஊரை பற்றி நான் செல்வதற்கு ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டின் மையமான திருச்சிக்கு வணக்கம். டெல்லிக்கு செங்கோட்டை. திருச்சிக்கு மலைக்கோட்டை. நான் இங்கே எதற்காக வந்து இருக்கிறேன் என்று கூறுவதற்கு கடமைப்பட்டு இருக்கிறேன். அரசு என்பது விமர்சனத்திற்கு உட்பட்டது. ஆனால் மத்திய அரசை விமர்சித்தால் தேச விரோதம் என்கிறார்கள். சைவ, வைணவ, சமய, இஸ்லாமியர் என அனைவரும் வாழும் இடம் இது. சந்தோஷமாக இருக்க கூடிய இடம் இது. 

அரசியல் சாசன புத்தகம் பாதுகாக்க பட வேண்டும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை நான் நாட்டுக்காக வந்து உள்ளேன். நாட்டு மக்கள் மீது நான் கொண்ட காதல் அதையும் தாண்டி புனிதமானது. திமுகவை பின்பற்றினால் இந்தியாவே பாராட்டப்படும். மதிய உணவு திட்டத்தை தொடந்து எதிர் எதிர் துருவங்கள் கொண்டவர்கள் சிறப்பாக தொடர்ந்தார்கள். தற்போது நம் முதலமைச்சர் காலை உணவு திட்டம் என சிறப்பாக கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்.

1 ரூபாய் கட்டினால் 29 பைசா கொடுக்கிறார்கள். அதை வைத்து தான் பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம். 1 ரூபாயை கொடுத்து பாருங்கள். நாங்கள் கொடுத்த 1 ரூபாயை திருப்பி கொடுங்கள் திமுக இந்தியாவின் மாடலாக மாறும்”

இவ்வாறு மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement