“அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்” - அண்ணாமலை!
தூத்துக்குடி விமான நிலையத்தில், முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
“அறத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களை கொலை செய்துள்ளது. துணை ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரியையும் கொலை செய்துள்ளனர். டிரோன்களை நமது நாட்டுக்குள் அனுப்பி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்த தவறுக்கு பாகிஸ்தானில் இருக்கக்கூடிய தீவிரவாதிகள் மீது மட்டும் தாக்குதல் நடத்துகின்றனர்.
பாகிஸ்தான் என்ன செய்கிறது இந்தியாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடு. இந்தியாவின் பொருளாதாரத்தில் 12ல் ஒரு பங்கு தான் பாகிஸ்தான் பொருளாதாரம். நாம் எந்த நாட்டின் எல்லையையும் பிடிப்பதற்காக சண்டை போடவில்லை. நமது நாட்டு மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாத தாக்குதலுக்குதான் பதில் தாக்குதல் நடத்துகிறோம்.
இந்தப் போர் இன்றோ, நாளையோ முடிவடைய போவது கிடையாது. இந்தப் போர் தீவிரவாதத்திற்கு எதிராக நடக்கிறது. இது இப்போது முடியாது. இந்தியாவின் நடவடிக்கையை பார்த்த பிறகு பாகிஸ்தான் இந்தியாவில் ஓர் உயிரை எடுப்பதற்கு பயப்பட வேண்டும். பாகிஸ்தான் நாடு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இல்லை. பாகிஸ்தானில் நாட்டுக்கு ராணுவம் அல்ல. ராணுவத்திற்கு ஒரு நாடு. ராணுவம் தான் அந்த நாட்டு அரசை கட்டுப்படுத்துகிறது.
பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் இருக்காது. தமிழகத்தில் முதல்வர் ராணுவ வீரர்களுக்காக முன்னெடுக்கும் பேரணி வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முதல்வரும் இந்திய அரசுக்கு இந்த நேரத்தில் தனது முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும். தமிழக அரசு 4 ஆண்டு சாதனை கொண்டாடுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழகத்தில் வேதனையான நான்காண்டுகள். தமிழகத்தின் பொருளாதாரத்தில் நாம் பின் நோக்கி செல்கிறோம். இன்றைய சூழ்நிலையில் அரசியல் பற்றி நாம் பேச வேண்டாம். அது வேறு மாறியாக மாறிவிடும்” என தெரிவித்தார்.