Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய பட்ஜெட்டுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு! நாளை போராட்டத்தில் ஈடுபட முடிவு!

09:37 PM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக முடிவு செய்துள்ளனர்.

Advertisement

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தொடர்ந்து உரையாற்றினார். இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என இந்தியா கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை (ஜூலை 24) போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள் :நீட் ஆள்மாறாட்ட வழக்கு: “சிபிசிஐடி விசாரணை அறிக்கையில் திருப்தி இல்லை என்றால் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும்” - உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

மேலும், ஆந்திரம், பிகார் ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களை அறிவித்து, மற்ற மாநிலங்கள் மீது பாரபட்சம் காட்டுவதாகவும், இரு மாநிலங்களைத் தவிர மக்களுக்கான பட்ஜெட் இது அல்ல எனவும் எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

Tags :
#budgetsession#financeministerBudget 2024Budget 2024-25IndiaINDIA AllianceloksabhaLokSabha2024mpNarendramodiNDAGovtNirmalaSitharamanparliamentPMOIndiaProtestrajyasabhaunion budgetUnionBudget
Advertisement
Next Article