For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இந்தியா கூட்டணி வெல்லப்போகிறது” - ராகுல் காந்தி பதிவு!

10:04 PM May 30, 2024 IST | Web Editor
“இந்தியா கூட்டணி வெல்லப்போகிறது”   ராகுல் காந்தி பதிவு
Advertisement

இந்தியா கூட்டணி வெல்லப்போகிறது எனவும், கடைசி நேரம் வரை வாக்குச் சாவடிகள் மற்றும் அறைகளைக் கண்காணிக்குமாறும் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, நாட்டின் மகத்தான மக்களுக்கு வணக்கம் செலுத்தும் வேளையில், மத்தியில் இந்தியா கூட்டணி அரசு அமையப் போகிறது என்பதை காங்கிரஸின் வீர சிங்கம் போன்ற தொண்டர்களுக்கு நான் நம்பிக்கையுடன் கூற விரும்புகிறேன். நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் அமைப்புகளைக் காப்பாற்ற தலைவணங்காமல் நின்ற அனைத்துத் தலைவர்களுக்கும், கூட்டணித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமரின் தவறான திசைதிருப்பல் முயற்சிகளுக்கு மத்தியிலும், பொதுநலன் சார்ந்த உண்மையான பிரச்னைகளில் போராடி தேர்தலில் வெற்றி பெற உள்ளோம். விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் குரலை உயர்த்தினோம். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கையையும் வேறு கண்ணோட்டமாக மாற்றும் புரட்சிகரமான உத்தரவாதங்களை நாங்கள் ஒன்றாக  முன்வைத்தோம். மேலும் எங்கள் செய்தியை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பரப்பினோம்.

 

கடைசி நேரம் வரை வாக்குச் சாவடிகள் மற்றும் அறைகளைக் கண்காணிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்தியா கூட்டணி வெல்லப்போகிறது ”

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement