For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகை உயர்வு - ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

01:00 PM Nov 03, 2023 IST | Jeni
புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகை உயர்வு   ஆளுநர் தமிழிசை ஒப்புதல்
Advertisement

புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகையை ரூ.10,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

Advertisement

கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி நடைபெற்ற புதுச்சேரி சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்து இருந்ததை அடுத்து, புதுச்சேரி மாநில விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகை ரூ.10,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த உதவித்தொகை உயர்வானது நவம்பர் 01-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் புதுச்சேரியில் 939, காரைக்கால் பகுதியில் 174, மாஹே பகுதியில் 87, ஏனாம் பகுதியில் 1 என மொத்தம் 1,201 விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்கள் பயன்பெறும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ரூ.2,042 கோடி நன்கொடை - முதலிடத்தை தக்கவைத்த ஷிவ் நாடார்..!

மேலும், மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்படுவது தொடர்பாக புதுச்சேரி மாநில விடுதலைப் போராட்ட தியாகிகள் மாதாந்திர உதவித் தொகை விதிகள்,1970-ல் திருத்தம் மேற்கொள்ளவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக துணைநிலை ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது. 

Tags :
Advertisement