"வட மாநில நபர்களை இங்கு சேர்க்கப்பட்டுள்ளது தவறான செயல்" - நயினார் நாகேந்திரன் பேட்டி!
சாத்தூர் செல்வதற்காக சென்னையிலிருந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியவர்,
"வட மாநில நபர்களை இங்கு சேர்க்கப்பட்டுள்ளது தவறான செயல், இது ஒரு ஊழல். மேற்கு வங்காளம் போல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழு லட்சம் அல்ல அதற்கு மேல் எவ்வளவு சேர்த்தாலும் பரவாயில்லை இங்கு ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.
இன்னும் தேர்தலுக்கு எட்டு மாத காலங்களில் உள்ள நிலையில் மக்கள் வெறுப்புடன் இருக்கிறார்கள் உறுதியாக ஆட்சி மாற்றம் வரும். திருப்பூரில் ரோந்து சென்ற எஸ்ஐ வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை, டிஜிபி அளவில் மட்டுமே பாதுகாப்பு உள்ளது. இதைப் பற்றி முதலமைச்சர் கண்டு கொள்வதில்லை. ரிவ்யூ மீட்டிங் கூட செய்வதில்லை. இந்த ஆட்சி ஒரு மோசமான ஆட்சியாக உள்ளது. ஓபிஎஸ் குறுஞ்செய்தி தான் ஆதாரம் என கூறியதற்கு அது அவரிடம் கேளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.