For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை - மதுரையில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு!

03:41 PM Nov 09, 2023 IST | Web Editor
ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை   மதுரையில் 60 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு
Advertisement

முல்லை பெரியாறு - வைகை அணையில் இருந்து மேலூர் பகுதிக்கு ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி  60 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. 

Advertisement

மதுரை மாவட்டம் மேலூர் பகுதி,  முல்லை பெரியாறு - வைகை அணையில் இருந்து பாசன
வசதி பெறும் கடைமடை பகுதியாக உள்ளது.  இதன் மூலம் ஒருபோக பாசனமாக சுமார் 86.600 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளை நிலங்களில் விவசாயம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், முல்லை பெரியாறு - வைகை அணையில்,  மேலூர் ஒருபோக பாசனத்திற்காக அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்.  வைகை ஆற்றில் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள  நிலையில் மேலூர் பகுதிக்கு ஒருபோக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.  மேலூர் பகுதி ஒருபோக பாசன விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக,  இருபோக பாசனத்திற்கு மட்டும் தண்ணீர் திறக்க முயற்சிகள்  மேற்கொண்டு செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

மேலூர் பகுதி ஒருபோக பாசனத்திற்காக,  முல்லை பெரியாறு - வைகை
அணையில் இருந்து  உரிய தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக,  மேலூர் அருகே உள்ள வெள்ளலூர்,
கோட்டநத்தம்பட்டி, உறங்கான்பட்டி, நயத்தான்பட்டி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட
கிராமங்களில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் "கடை அடைப்பு"
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
Advertisement