For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

’பதவி நீக்க மசோதா’- ஜனநாயகத்திற்கு எதிரானது என செல்வபெருந்தகை விமர்சனம்!

பதவி நீக்க மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். 
06:51 PM Aug 20, 2025 IST | Web Editor
பதவி நீக்க மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். 
’பதவி நீக்க மசோதா’  ஜனநாயகத்திற்கு எதிரானது என செல்வபெருந்தகை விமர்சனம்
Advertisement

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கியது.  இந்த கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் இன்று முக்கியமான மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிமுகம் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

அதன்படி, அரசியலமைப்பு மசோதா (130ஆவது திருத்தம்), யூனியன் பிரதேசங்களின் அரசு திருத்த மசோதா, ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். அவற்றில் இந்த ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2019 ஆனது, அதன் 54-வது பிரிவில் திருத்தம் கோருகிறது.

இதன்படி, பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் போன்ற ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக 30 நாள்கள் சிறை வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் தன்னிச்சையாகவே பதவிநீக்கம் செய்யப்படுவர் என்ற சட்ட வடிவை வழங்குகிறது.இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இந்த பதவி நீக்க மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவியிலிருந்து அகற்றுவது என 130வது அரசியமைப்பு சட்டத்திருத்தம் ஒன்றிய அரசு கொண்டு வருவது அரசியலமைப்பிற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமானது.

இதுவரை பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசமைப்பு சட்டத்திருத்தங்கள் அனைத்தும் அவர்களுக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் ஒன்றிய பாஜக அரசு, இதை பயன்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, அவசரகதியில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டத்திருத்தத்தை உடனடியாக கைவிடவேண்டும்"

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement