“நாகரீகமாக பேசினால் அண்ணாமலைக்கு பதில் சொல்லலாம்” -கனிமொழி. எம்.பி!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகரீகமாக பேசினால் அவருக்கு பதில் சொல்லலாம் என தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற காது மற்றும் பேச்சு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாமினை மக்களவை உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:
சமையல் எரிவாயு விலையை குறைத்து இருக்க முடியும் என்றால் முன்பே குறைத்திருக்கலாம். தேர்தல் வரும் நேரத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர். மகளிர் தினத்தன்று சிலிண்டர் விலையை குறைப்பது பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டுமே கவலை. மற்றதை பற்றி கவலை இல்லை என்பது போல் உள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம், எவ்வளவோ விஷயங்களை செய்யலாம். சிலிண்டர் விலையை குறைத்து இருப்பது சமையல் அறையிலேயே பெண்கள் இருக்கக்கூடிய ஒரு விஷயமாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் வருவதால் பிரதமர் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்
தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவையும் , கனிமொழி எம்பியையும் விமர்சனம் செய்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு... நாகரீகமாக பேசுபவர்களுக்கு பதில் சொல்லலாம் என கனிமொழி எம்.பி பதிலளித்தார்.