தமிழ்நாட்டில் நியாயத்தை பேசினால் கூட்டணியா ..? - அண்ணாமலை பேட்டி..!
கோவை வரதராஜபுரம் பகுதியில் பாஜக நிர்வாகியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
”சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கரூர் சம்பவத்தில் அரசின் மீதும், காவல்துறை மீதும் தவறில்லை என கூறியிருக்கிறார். காவல்துறையின் செய்திகுறிப்பில் கரூர் சம்பவ இடத்தில் பாதுகாப்பிற்காக 350 காவலர்கள் இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்கள். முன்னதாக ஏ.டி.ஜி.பி அளித்த பேட்டியில் 500 காவலர்கள் இருந்ததாக தெரிவித்திருந்தார். இன்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் 606 காவலர்கள் இருந்ததாகக் கூறி இருக்கிறார். வழக்கு சிபிஐக்கு சென்ற பிறகு முன்னுக்குபின் முரணாக கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். முதல்வர் பிரதே பிசோதனை தொடர்பாக புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார். சிபிஐ விசாரணையில் உண்மைகள் வெளி வரும். இவர்கள் கூறும் கணக்கு எந்த இடத்தில் டேலி ஆகவில்லை.
41 பேர் உயிரழந்த பிறகு கூட ஒரு அதிகாரியும் ஏன் சஸ்பெண்ட் செய்யபடவில்லை. பெண்களின் மீது கை வைப்பவர்கள், தாலி செயினை அறுப்பவர்களை கைது செய்ய இவர்களுக்கு நேரமில்லை. இரவு 12 மணிக்கு யூடியூபர்களை கைது செய்கின்றனர். கரூர் சம்பவத்தில் திமுக அரசியல் விளையாட்டு விளையாடுவதை தான் நாங்கள் தோலுரித்து காட்டி கொண்டிருக்கிறோம்.
கரூர் மாவட்ட ஆட்சியர் மீதோ அல்லது எஸ்.பி. மீதோ நடவடிக்கை எடுத்திருந்தால் நாங்கள் வேறு மாதிரி பேசி இருப்போம். தமிழ்நாடு அரசு கூறியிருக்ககூடிய தரவுகளை வைத்துதான் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். எத்தனை டேபிள் எத்தனை மருத்துவர்கள்,என தமிழ்நாடு கொடுத்திருக்கூடிய தகவல்களைத் தான் நீதிமன்றம் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் நியாயத்தை பேசினால், தர்மத்தை பேசினால் கூட்டணி என்கிறார்கள். விஜயின் சித்தாந்தம் வேறு. எங்களின் சித்தாந்தம் வேறு. ஆனால் நியாத்தை பேசுவது தவறில்லை” என்றார்.