"பாஜகவின் கொள்கைகளுடன் ஒத்து போகும் ஆட்சி என்றால் அது திமுக தான்" - சீமான் பேட்டி!
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ராதாகிருஷ்ணன் பதவியேற்பு குறித்து சொல்ல எதுவும் இல்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவர் கட்சியின் முடிவு. அதில் கருத்து சொல்ல முடியாது.
படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது. இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி. எங்கள் ஊரில் இதேபோல் இத்திட்டத்தில் மனுக்களை பெற்று அதை ஆற்றில் வீசினார்கள்.
பாஜக, ஆர்எஸ்எஸ் கோட்பாடு என்னவோ அப்படித்தான் பாஜக இயங்கும். ஆர்எஸ்எஸ் இல் பயிற்சி எடுத்தவர்கள் அந்த சித்தாந்தப்படி தான் இயங்குவார்கள். பாஜகவின் கொள்கைகளுடன் ஒத்து போய் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது திமுக தான். ஆப்பரேஷன் செந்துறை ஆதரித்தது முதல்வர் தான்
அதற்கு பிரதிநிதியாக போய் உலக நாடுகளில் பேசியது. கனிமொழி தான் குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியவர்கள். மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து பேசுகிறார்கள். இவர்களிடம் உறுதித் தன்மை என்ன இருக்கிறது.
குஜராத் கலவரத்தை திமுக கட்சி தலைவர்கள் ஆதரித்து பேசினார்கள் ஆனால் அதே கட்சியால் நடைபெற்ற மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து போராடினார்கள். அப்போது கூட்டணியில் இருந்ததால் ஆதரித்தீர்கள் இப்போது கூட்டணியில் இல்லாததால் எதிர்த்தீர்கள். உங்களுக்கு ஒரு நிலைப்பாடு இல்லை. எல்லா வழியிலும் நட்போடு இருப்பது நீங்கள் தான். இள கணேசன் ஐயாவின் மறைவிற்கு மோடி செய்ய வேண்டிய மரியாதை முதல்வர் செய்ததற்கு காரணம் என்ன? மூப்பனார் ஐயாவின் மறைவிற்கு வந்த நிர்மலா சீதாராமன் இதற்கு வர முடியவில்லை இவர்கள் நெருக்கமாக இருப்பதற்கு இதை விட வேறு சான்று என்ன உள்ளது.
இன்று நான் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் மக்கள்தான் ஒரு காலத்தில் நான் தங்குவதற்கு விடுதி கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். அதிகாரங்களை எதிர்த்து போரிட்டு சண்டை போட்டதால் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதற்கெல்லாம் பயப்படக்கூடாது. எங்கள் தாத்தாவின் பெயரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டாம். எங்களுடைய வரலாறு உள்ளது பாண்டியன், நெடுஞ்செழியன் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு. ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெற உள்ளது. நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமான அரசியலாக இல்லாமல் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியலாக பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.