For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும்!” - அமைச்சர் அதிஷி பிரதமருக்கு கடிதம்!

09:29 PM Jun 19, 2024 IST | Web Editor
“2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் ”   அமைச்சர் அதிஷி பிரதமருக்கு கடிதம்
Advertisement

“டெல்லியின் குடிநீர் பிரச்னைக்கு அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்வு காணவில்லை என்றால், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும்” என டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். 

Advertisement

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடிநீர் பற்றாக்குறை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வெயிலின் தாக்கத்தால் மக்கள்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது குடிநீர் பிரச்னையும் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“டெல்லியின் குடிநீர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில் இதற்கு உரிய தீர்வு காண வேண்டியுள்ளேன். அடுத்த இரண்டு நாட்களுக்குள் இதற்கு தீர்வு இல்லை என்றால் வரும் ஜூன் 21-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன். நேற்று ஹரியாணா மாநிலம் 513 எம்ஜிடி நீரை திறந்து விட்டார்கள். ஆனால், அவர்கள் டெல்லிக்கு தர வேண்டிய பங்கு 613 எம்ஜிடி” என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரே குடிநீர் பிரச்னைக்காக உச்சநீதிமன்றத்தை நாடியது ஆம் ஆத்மி. அந்த மனுவில் பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியாணா, உத்தர பிரதேசம் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கூடுதல் நீரை திறக்க வேண்டும் என ஆம் ஆத்மி அரசு கோரிக்கை வைத்தது. தொடர்ந்து இமாச்சல் பிரதேசம் கூடுதல் நீரை திறக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீர் இல்லை என தெரிவித்தது இமாச்சல் அரசு. இதற்கிடையில் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு எதிராக டெல்லி பாஜக போராட்டம் மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement