“நான் மட்டும் ஆட்சியில் இருந்தால்...” - பாலியல் வன்கொடுமைகள் குறித்து அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் உள்ள ஆர்.கே.பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். அதன் பின்பு அங்கு கட்சி கொடி ஏற்றி வைத்த அவர், கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “திருத்தணி நகரில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. பாட்டாளி மக்கள் கட்சிக்கு 35 ஆண்டு காலம் வரலாறு உள்ளது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிற்கே நாம் பல சாதனைகளை செய்திருக்கிறோம். வேறு எந்த கட்சியும் இதனை சொல்ல முடியாது தமிழ்நாட்டில் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் திமுகவோ அல்லது ஆண்டு முடித்த அதிமுகவோ இதனை சொல்ல முடியாது
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் சமூக நீதி சாதனைகள் , விவசாய
சாதனைகள், சுற்றுச்சூழல் சாதனைகள், கல்விக்கான சாதனைகள், செய்து இருக்கின்றோம். 18-வது நிதிநிலை அறிக்கை வெளியிட்டேன், 18 ஆண்டுகாலமாக வேளாண்மைக்கு என்ன தேவை விவசாயிகளுக்கு என்ன தேவை, விவசாய முன்னேற்றத்திற்கு என்ன தேவை, என்பதை அரசாங்கம் வெளியிடுவதற்கு
முன்பாக, பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டு வருகிறது.
4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு வேளாண்மை துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை வெளியிடுவோம் என்று முடிவு செய்துள்ளனர். இந்த முடிவுக்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு அரசு ஒதுக்கியது 14,500, கோடி, ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி நாம் வெளியிட்டுள்ள விவசாயிகளுக்கான பட்ஜெட்டில் 85 ஆயிரம் கோடி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுபாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டை ஆளுகின்ற கட்சியாக இருந்தால் விவசாயத்திற்கு மட்டும் 85 ஆயிரம் கோடியாக இருக்கும்.
தமிழ்நாட்டில் சட்டமும் கிடையாது சட்ட ஒழுங்கும் கிடையாது. பெண்கள் எங்கும் பாதுகாப்பாக தனியாக செல்ல முடியாத சூழல் உள்ளது. பல பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கிறது. நான் மட்டும் ஆட்சியில் இருந்தால், வேற மாதிரி செய்திருக்க முடியும். பயம் வர வேண்டும். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை மாத்திரை, கஞ்சா மது விற்பனை நடைபெறுகிறது, இதற்கெல்லாம் காரணம் யார்? பாதுகாப்பு இல்லாமல் பெண்கள் எங்கும் செல்ல முடியவில்லை இதையெல்லாம் நீங்கள் அனைவரும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு யார் மாற்றத்தை கொண்டு வருவார்களோ அவர்களுக்கு நீங்கள் ஆதரவாளியுங்கள்”
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.