Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களின் அதிகாரங்கள் பறி போகும்" - தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் பேச்சு!

09:39 AM Mar 04, 2024 IST | Web Editor
Advertisement

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நமது முழு அதிகாரமும் பறி போகும் என தமிழ்
புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாமக்கல் மாவட்டம்,  பொம்மைகுட்டைமேட்டில் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் மாநில உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் அன்பில் மகேஸ்,  மதிவேந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் நாகை திருவள்ளுவன் உரையாற்றினார்.

இதையும் படியுங்கள் : சீர்காழி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார்!

அப்போது அவர் கூறியதாவது :

"அடைக்கப்பட்ட மூட்டைகளில் உள்ள நம் சமூகம் பல்வேறு உரிமைகளை பெற வேண்டியுள்ளது. திமுக தலைவர் போல் உள்ளவர்கள் ஆளும் போது தான் நமது உரிமைகளை பெற முடியும். பாஜகவினர் ஆளும் போது மாநில உரிமைகளை யாரிடமிருந்து மீட்பது. மாநில உரிமைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு மாற்ற முயற்சி செய்கிறது.

மோடியின் ஆட்சி குறித்து பெருமையாக கூறினாலும், கடந்த 10 ஆண்டுகளில் கூறிய வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என கூறினார்கள். ஆனால், பொருளாதாரத்தில் பெரிதாக வளர்ச்சி ஏற்படவில்லை. கடந்த 10 ஆண்டு ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி என்பது 7.5% உள்ளது.

தமிழுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்த நிலையில், சமஸ்கிருதத்திற்கு நிதி ஒதுக்கும் இந்த அரசு யாருக்காக ஆட்சி செய்கிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது. தமிழ் மொழியை பாதுகாக்க தான் தமிழ் புலிகள் கட்சி இந்த மாநாட்டை நடத்துகிறது. மாநிலங்களூக்கு தனியாக உள்ள அதிகாரங்கள் இருக்க கூடாது என பாஜகவினர் நினைக்கிறார்கள். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நமது முழு அதிகாரமும் பறி போகும். நமது அதிகாரத்தை மீட்க வேண்டும் என்றால் அதிகார களத்தில் நாம் இருக்க வேண்டும்"

இவ்வாறு தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் பேசினார்.

Tags :
தமிழ்புலிகள்கட்சிAmbedkarBJPDMKElection2024Nagai ThiruvalluvanNarendramodiparlimentaryelection
Advertisement
Next Article