For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ஹாசன் மாவட்டத்திற்கு சென்று ஆபாச வீடியோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தியுங்கள்!” - அமித் ஷாவுக்கு டி.கே.சிவக்குமார் அழைப்பு!

03:54 PM May 02, 2024 IST | Web Editor
“ஹாசன் மாவட்டத்திற்கு சென்று ஆபாச வீடியோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தியுங்கள் ”   அமித் ஷாவுக்கு டி கே சிவக்குமார் அழைப்பு
Advertisement

பெண்கள் மீது அமித்ஷாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் ஹாசன் மாவட்டத்திற்குச் சென்று ஆபாச வீடியோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கட்டும் என்று கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். 

Advertisement

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் இரண்டாவது கட்டமாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

இதனிடையே தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்தது. இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டார். இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டது.

மேலும் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதுடன், அவருக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்து, அவர் இந்தியாவுக்கு திரும்புவதை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதினார்.

இந்நிலையில் தேடப்படும் குற்றவாளியாக பிரஜ்வால் ரேவண்ணா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவுக்கு தேர்தல் பரப்புரைக்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஹுப்பாலியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நேஹா ஹிரேமத்தின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். மேலும் பிரஜ்வால் ரேவண்ணா குறித்து காங்கிரஸ் கட்சிக்கு  பல மாதங்களுக்கு முன்பே தெரியும் என்றும், ஒக்காலிகா சமூகத்தினரின் ஓட்டுக்காக அந்த சமூகத்தை சேர்ந்த பிரஜ்வால் ரேவண்ணாவை தப்ப விட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் தாங்கள் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துள்ள போதும் பிரஜ்வால் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். பாஜகவின் நோக்கம் தெளிவாக இருக்கிறது. பெண்களுக்கு எதிராக அநீதி இழைத்தோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், பெண்கள் மீது உண்மையிலேயே அமித்ஷாவிற்கு அக்கறை இருந்தால், ஹாசன் மாவட்டத்திற்குச் சென்று ஆபாச வீடியோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்குமாறு டி.கே.சிவக்குமார் வலியுறுத்தினார். மேலும் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஓட்டுனர் கார்த்திக்கை மலேசியா அனுப்பியது யார் என்று வினவிய டி.கே.சிவக்குமார்,  பாஜக தலைவர் தேவராஜே கவுடா எப்படி ஆபாச வீடியோக்களை வெளியிட்டார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags :
Advertisement