For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ICCR | “தமிழ் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் அவசியம்!” - வெளியுறவுத் துறை விளம்பரத்தால் சர்ச்சை!

05:50 PM Sep 16, 2024 IST | Web Editor
 iccr   “தமிழ் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி  சமஸ்கிருதம் அவசியம் ”   வெளியுறவுத் துறை விளம்பரத்தால் சர்ச்சை
Advertisement

அயல்நாடுகளில் பணிபுரிவதற்காகச் செல்லும் தமிழ் மொழி ஆசிரியர் பணிக்கு ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்கான தேவை என வெளியிடப்பட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது.

Advertisement

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பண்பாட்டு உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (இந்தியன் கவுன்சில் ஃபார் கல்சுரல் ரிலேஷன்ஸ் - ஐசிசிஆர்) குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களில் தமிழ் மொழி ஆசிரியர்களைப் பணியமர்த்துவதற்காக இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று, செப். 15-ல்  விளம்பரம் வெளியிட்டு அத்துடன் இணைய தளத்திலும் பதிவேற்றியுள்ளது. தகுதி, அனுபவம், விண்ணப்பப் படிவம், விதிமுறைகள், நிபந்தனைகள் போன்ற விவரங்களை ஐசிசிஆர் இணையதளத்தில் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் கவுன்சிலால் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். ஐசிசிஆர்-ஆல் தேர்வு செய்யப்படுபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இது சம்பந்தமாக எவ்வித வினாக்களும் எழுப்ப இயலாது. விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 17. தமிழ் இலக்கியத்தில் முதுநிலைப் பட்டத்துடன் பி.எட். அல்லது எம்.எட். மேலும் பள்ளி / நிறுவனத்தில் தமிழாசிரியராக ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம். தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல பயிற்சி, கணினி அறிவு ஆகியவற்றுடன் இந்திய தத்துவம், வரலாறு, இசை பற்றியெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று தகுதிகள்...

தகுதி...

விரும்பத் தக்கது என்ற பெயரில் அடுத்துக் குறிப்பிடுவதில்தான் சிக்கல் இருக்கிறது – ஹிந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும்! கூடுதலாக வேறொரு அயல்நாட்டு மொழியும் தெரிந்திருக்க வேண்டும் என்றொரு நிபந்தனையும் உடனிருக்கிறது. விளம்பரத்தைப் பார்த்ததும் தமிழ் படித்தவர்களுக்கு, தமிழாசிரியர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று நினைத்து, விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கிப் படித்துப் பார்த்தால் நிச்சயம் பெரும்  ஏமாற்றமே மிஞ்சும்.

ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமே; ஆனால், ஹிந்தியும் சமஸ்கிருதமும் எதற்காகத் தெரிந்திருக்க வேண்டும்? என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இந்த விளம்பரத்தைத் தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தலையிட்டுத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டிலுள்ள கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விளம்பரம் இன்னும் கவனம் பெறாத நிலையில் உடனடியாகத்  தமிழ்நாடு அரசு தலையிட்டு, சர்ச்சைக்குரிய இந்த நிபந்தனைகளை வெளியுறவுத் துறையின் பண்பாட்டு உறவுகளுக்கான இந்திய கவுன்சில் விலக்கிக் கொள்ளச் செய்ய வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
Advertisement