For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"விஜய் மதவாத சக்திகளுக்கு இறையாகாமல் இருந்தால் மகிழ்ச்சி" - செல்வப்பெருந்தகை!

இந்தியா கூட்டணி எக்கு கோட்டை போல் பலமாக உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
07:30 AM Jul 06, 2025 IST | Web Editor
இந்தியா கூட்டணி எக்கு கோட்டை போல் பலமாக உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
 விஜய் மதவாத சக்திகளுக்கு இறையாகாமல் இருந்தால் மகிழ்ச்சி    செல்வப்பெருந்தகை
Advertisement

பாஜக எப்போதும் பிரித்தாளும் கட்சி. தமிழ்நாட்டில் முந்தைய தேர்தலில் ஒரு
அதிமுகவை 4 பிரிவுகளாக மாற்றியது. இப்போது பாமகவை இரண்டாக பிரிக்க
முயற்சிக்கிறது இதுதான் பாஜக எனவே பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும்
அவர்களின் செயல் திட்டமே அந்த கட்சியை அழிக்க வேண்டும் என்பதுதான், அதிமுக-பாஜக கூட்டணி முரண்பட்ட கூட்டணி அதனை மக்கள் புறக்கணிப்பார்கள் என நெல்லையில் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Advertisement

2026 சட்டமன்ற தேர்தல் ஆயுத்தப்பணி கூட்டம் மற்றும் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டமன்ற குழு தலைவர் ராஜேஸ்குமார், மாநில பொருளாளர் ரூபி ஆர்.மனோகரன், ராபர்ட் ப்ரூஸ் எம்பி, கிராம சீரமைப்பு குழுவின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் 2026 தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கி பேசினர். இதனைத் தொடர்ந்து கிராம கமிட்டி உறுப்பினர்களுக்கு நவீன தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியவர், "2026 தேர்தலில் மதவாத சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்க கூடாது என்ற கோஷத்தோடு பிரச்சாரத்தை முன்னெடுத்து இருக்கிறோம். 2 லட்சம் அடையாள அட்டையை கிராம கமிட்டி தலைவர்களுக்கு வழங்க இருக்கிறோம். 2 லட்சம் என்பது 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் அளவிற்கு ஒரு திட்டத்தை வைத்துள்ளோம். இதற்காக தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில்
காங்கிரஸின் கூட்டணி குறித்து கட்சியின் அகில இந்திய தலைமையே முடிவு செய்யும். விஐய் பாஜகாவுடன் கூட்டணி எப்போதும் இல்லை என கூறியுள்ளார். அவர் மதவாத சக்திகளுக்கு இறையாகமல் இருந்தால் மகிழ்ச்சியே. பாஜக எங்கெங்கு கூட்டணி வைத்துள்ளதோ அந்த கட்சியை பிளவு படுத்தி விடுகிறது. இல்லை என்றால் அழித்துவிடுகிறது.

தமிழ்நாட்டில் முந்தைய தேர்தலில் அதிமுகவை 4 பிரிவுகளாக மாற்றியது. இப்போது பாமகவை இரண்டாக பிரிக்க முயற்சிக்கிறது, இதுதான் பாஜக. எனவே பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்களின் செயல் திட்டமே அந்த கட்சியை அழிக்க வேண்டும் என்பதுதான். அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 4 தேர்தல்களாக தொடர் தோல்வியை சந்தித்துள்ளார். வரும் தேர்தலிலும் அதே நிலை தொடரும். 4 தேர்தலில் படுதோல்வி அடைந்தவர் யாரை வீட்டிற்கு அனுப்ப முடியும், அவர் வீட்டுக்கு போகாமல் அவரது கட்சியை பாதுகாத்து வைத்திருந்தால் சரி.

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள், இப்போது கூட்டணி வைத்துள்ளார்கள். இறுதியாக தந்தை பெரியார், அண்ணா ஆகியோரை அதிமுக முன்னாள் அமைச்சர்களை உட்கார வைத்துக்கொண்டே இழிவு படுத்துகிறார்கள். இதனை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா, ஆகவே அதிமுக - பாஜக கூட்டணி முன்னுக்கு பின் முரணான கூட்டணி. இந்த கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்படும், அதிமுக தொண்டர்களாலே புறக்கணிக்கப்படும்.

திமுக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணி. இந்தியா கூட்டணி எக்கு கோட்டை போல் பலமாக உள்ளது. அதனை யாராலும் சேதப்படுத்த முடியாது. மதவாத சக்திகள் வலுபெற்றுவிடக் கூடாது என்பதே எங்கள் கூட்டணியின் நோக்கம். அதற்காக அணி திரண்டு உள்ளோம், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாதது வருத்தமளிக்கிறது. இருப்பினும் காவல் துறையின் மீது நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement