காப்பி விவசாயிகளின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்திற்கு எடுத்து சென்று உதவுவேன் - பிரியங்கா காந்தி!
கேரள மாநிலம் வயநாடு மக்களவை உறுப்பினரான பிரியங்கா காந்தி இன்று வயநாட்டில் உள்ள காப்பி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்றார்.
07:03 PM Sep 19, 2025 IST | Web Editor
Advertisement
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது மக்களவை தொகுதியான வயநாட்டில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
Advertisement
அதன் ஒரு பகுதியாக இன்று அவர் வயநாட்டில் உள்ள கல்பெட்டா பகுதியில் உள்ள காப்பி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்றார். இதனை தொடர்ந்து பத்திரிக்கியாளர்களை சந்தித்த அவர்,
”காப்பி வாரியம் மற்றும் காப்பி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் சுவாரஸ்யமான சந்திப்பு நடந்தது. அவர்களுக்கு உள்ள அனைத்து சிரமங்களையும், அவர்களுக்கு ஆதரவளிக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்பதையும் நாங்கள் விவாதித்தோம்.
அவர்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்திலும், தொடர்புடைய அமைச்சகங்களுடனும் எடுத்துச் சென்று அவர்களுக்கு உதவுவேன் என்று நான் அவர்களுக்கு உறுதியளித்துள்ளேன்.” என்று தெரிவித்தார்.