For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”அமித்ஷா சென்னை வந்தபோது என்னை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது” - ஓபிஎஸ் பேட்டி!

அமித்ஷா சென்னை வந்தபோது என்னை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
05:33 PM May 15, 2025 IST | Web Editor
அமித்ஷா சென்னை வந்தபோது என்னை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
”அமித்ஷா சென்னை வந்தபோது என்னை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது”   ஓபிஎஸ் பேட்டி
Advertisement

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisement

அப்போது அவர் கூறியதாவது, “மாவட்ட செயலாளர்கள் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து இன்று சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எந்த மாதிரி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். மாவட்ட செயலாளர்கள் மூத்த நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு பதிவு செய்துள்ளோம். இன்று வரை தேசிய ஜனநாயகக கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு ஒரு நல்ல முடிவை தெரிவிப்போம்.

எடப்பாடி பழனிசாமி இருக்கும் கூட்டணியில் நாங்கள் கூட்டணியில் இருப்பது நல்லதா? இல்லாவிட்டால் நல்லதா? அமித்ஷா சென்னை வந்தபோது என்னை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது.  தொண்டர்களின் கருத்துக்களை கேட்ட பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம். பிரிந்தும் இருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தான் எங்களுடன் நிலைப்பாடு.

என்னுடைய அறிக்கைகளை பெரும்பாலும் நீங்கள் செய்திகளில் வெளியிடுவதில்லை. என்னைப் பொறுத்தவரையும் மறைமுகம் என்ற பேச்சுவார்த்தை யாரிடமும் கிடையாது. NDA கூட்டணியிப் 9 கட்சிகள் உள்ளது. பொள்ளாச்சி சம்பவம் யார் ஆட்சியில் நடந்தாலும் அது கண்டனத்துக்குரியது”

இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement