'1 வருடமாக சம்பளம் இல்லை...வேலையும் போச்சு...' - CEO-வின் #Passport மற்றும் #USVisaவை திருடிய ஊழியர்!
ஒரு வருடமாக சம்பளம் தராமல் வேலையை விட்டு நீக்கிய நிலையில் அந் நிறுவனத்தின் சிஇஓவின் பாஸ்போர்ட் மற்றும் US விசாவை முன்னாள் ஊழியர் ஒருவர் திருடியதாக கூறப்படும் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
பெங்களூரை மையமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமான சார்த்தி ஏஐ நிறுவனம் சமீபத்தில் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. லாபத்தை அதிகரிப்பதற்காகவும் செலவுகளை குறைப்பதற்காகவும் ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதனுடன் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பல ஊழியர்களுக்கான சம்பளத்தை தரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் இருந்து வேலைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியர் ஒருவர் அந்நிறுவன நிறுவனர் மற்றும் சிஇஓவான விஸ்வ நாத் ஜாவின் பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க விசாவை திருடிவிட்டதாக கூறப்படுகிறது. செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய சிஇஓ, புதிய பாஸ்போர்ட் பெற்று விட்டாலும் அமெரிக்கா செல்வதற்கான விசாவை மீண்டும் பெற முடியவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் ஒரு வருடம் ஆக சம்பளம் தரவில்லை என்ற குற்றச்சாட்டு நிறுவனத்தின் நன் மதிப்பை கெடுக்கும் பொய்யான குற்றச்சாட்டு என்று கூறினார். தனது பாஸ்போர்ட் மற்றும் விசாவை திருடிய ஊழியர் தன்னிடம் வந்து மீண்டும் அதனை ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனத்தின் சிஇஓ எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.