For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"லென்ஸ் மூலம் பல முறை படித்தேன்...பட்ஜெட்டில் ‘அயோத்தி’ என்ற வார்த்தை இல்லை” - பைசாபாத் எம்.பி. விமர்சனம்!

08:55 AM Jul 31, 2024 IST | Web Editor
 லென்ஸ் மூலம் பல முறை படித்தேன்   பட்ஜெட்டில் ‘அயோத்தி’ என்ற வார்த்தை இல்லை”   பைசாபாத் எம் பி  விமர்சனம்
Advertisement

மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் அயோத்தி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் பைசாபாத் தொகுதி சமாஜ்வாதி எம்.பி. அவ்தேஷ் பிரசாத் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் உத்தர பிரதேச மாநிலம் பைசாபாத் தொகுதி சமாஜ்வாதி எம்.பி. அவ்தேஷ் பிரசாத் பேசியதாவது,

"மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டை நான் லென்ஸ் மூலமாகவும் பலமுறை படித்தேன். இதில் அயோத்தி என்ற பெயர் கூடத் தென்படவில்லை. அயோத்தியின் பெயரில் பாஜக அரசியல் செய்து ஆதாயம் பெற்றுள்ளது. அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதி பொதுத் தொகுதியாக இருப்பினும் அங்கு தலித் சமூகத்தை சேர்ந்த என்னை அகிலேஷ் யாதவ் போட்டியிட வைத்தார். அங்கு நான் வெற்றி பெற்றதால் அயோத்திக்கு எந்த தொகையும் பாஜக அரசு ஒதுக்கவில்லை. அயோத்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

எனக்கு ராமரின் ஆசியால் கிடைத்த வெற்றியால் அயோத்திவாசிகள் தண்டிக்கப்பட்டு உள்ளனர். உ.பி. அரசால், பொதுமக்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டுள்ளன. சுமார் மூன்று தலைமுறையாக இருந்த வீடும் இடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இடிக்கப்பட்டதில் மூன்று உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள நிஷாத் காலனி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, அங்கு கடைகள் கட்டப்பட்டுள்ளன. இவை பெரும் பணக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

ராமர் கோயில் கட்டுமானத்தின்போது நில பேர ஊழலும் அயோத்தியில் நடைபெற்றுள்ளது. வெறும் ரூ.2 கோடிக்கு வாங்கிய சிறிய நிலம், அடுத்த இரண்டு மணி நேரத்தில் ரூ.18 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஊழல்களை விசாரிக்க குழு அமைப்பது அவசியம். 2027 சட்டப்பேரவை தேர்தலில் உ.பி.யிலிருந்து பாஜக வெளியேற்றப்படும். 2029-ல் நாட்டின் ஆட்சியிலிருந்தும் விலக்கி வைக்கப்படும்" இவ்வாறு அவர் பேசினார்.

அயோத்தியில் கடந்த ஜனவரி 22-ல் ராமர் கோயில் திறக்கப்பட்டது. உ.பி.யின் 80 தொகுதிகளில் 2019 தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இம்முறை 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் தோல்வி அடைந்தது.

Tags :
Advertisement