For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்த பெருமை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

12:28 PM Jan 24, 2024 IST | Web Editor
 ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்த பெருமை    முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

 "ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் இந்த ஸ்டாலின் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்த பெருமை" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.  அதன்படி மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்படுவதற்காக 3.2.2023 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து ரூ.62 கோடியே 77 இலட்சத்து 62 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கு 18.3.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மூலம் வாடிவாசல், ஒரே நேரத்தில் 5,000 பார்வையாளர்கள் அமர்ந்து காணும் வசதிகளுடன் மூன்றடுக்குப் பார்வையாளர் மாடம், ஏறுதழுவுதல் நடைபெறும் இடம், மிக முக்கிய விருந்தினர்கள் அமரும் இடம், ஏறுதழுவுதலில் பங்குபெறும் காளைகளின் எழுச்சி வடிவங்களைப் பிரதிபலிக்கும் அருங்காட்சியகம், ஒலி-ஒளி காட்சிக்கூடம், கால்நடை மருந்தகம், நூலகம், மாடுபிடி வீரர்களுக்கான தங்கும் அறைகள், புல்வெளிகளுடன்கூடிய தோட்டம் என அனைத்தையும் கொண்டுள்ள 83,462 சதுரடி பரப்புடைய மிகப் பிரம்மாண்டமான கட்டடமாக ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  குடியரசு தின விழா : ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் முடிவு.!

இந்த நிலையில்  இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.  இதன் பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த நிலையில் ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது:

“மதுரையை தூங்கா நகரம் என்பார்கள், போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியை தூள் தூளாக்கும் நகரம் என்பதை வாடிவாசல் ஆண்டுதோறும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.  ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் இந்த ஸ்டாலின் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்த பெருமை.  2015-ல் அறிவிக்கப்பட்டு இன்று வரை மத்திய பாஜக அரசால் மதுரைக்கு கொண்டுவரப்படாத ஒரு திட்டம் இருக்கிறது.  அது உங்கள் ஞாபகத்துக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
Advertisement