Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பட்ஜெட் குறித்து பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது" - அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
01:32 PM Mar 16, 2025 IST | Web Editor
Advertisement

அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

Advertisement

"இந்திய அரசின் முன்னாள் நிதி அமைச்சரும், நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினருமான ப.சிதம்பரம் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 குறித்துப் பாராட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் நிதிப் பற்றாக்குறையை 3 சதவிகிதமாகக் குறைத்துள்ளதனையும், வருவாய் பற்றாக்குறையை 41ஆயிரத்து 635 கோடியாகக் குறைத்ததையும் சுட்டிக்காட்டிப் பாராட்டியுள்ளார்.

ஒரு அரசின் முதலீட்டு அளவை பொறுத்தே வளர்ச்சி இருக்கும் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசு தனது முதலீட்டு அளவை 22.4% அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிறப்பாக வாழ்த்தியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
2025BudgetBudgetChidambaramMinisterMKStalinpostedpraisedThangam thennarasutweet
Advertisement
Next Article