"பிரதமர் மோடியின் விருப்பத்தினாலேயே கோவை தொகுதியில் போட்டியிடுகிறேன்" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
பிரதமர் மோடியின் விருப்பத்தினாலேயே கோவை தொகுதியில் போட்டியிடு பாஜக மாநில தலைவரும், கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசியல் தான் எனக்கு முக்கியம். டெல்லி அரசியலில் விருப்பம் இல்லை. பிரதமர் மோடியின் உத்தரவை மதித்து நடப்பவன் நான். பிரதமர் மோடியின் விருப்பத்தினாலேயே கோவை தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று பாஜக மாநில தலைவரும், கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : #CSKvsRCB | பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சிஎஸ்கே!
இது தொடர்பாக அவர் கூறியதாவது :
"கோவை நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை 3 வேட்பாளர்களுக்கு இடையே நடக்கும் போட்டி,போட்டியே இல்லை. 70 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்துவரும் அதர்மம் ஒரு பக்கமும் தர்மம் ஒரு பக்கமும், இரண்டிற்கும் இடையே தான் தேர்தல் நடைபெற்ற உள்ளது. தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு பணம் மழை கோவையில் தான் பொழியும். மக்களுக்கு இலவசங்கள் அள்ளி தெளிக்கப்படும்.
முதலமைச்சர் 40 நாட்கள் கோவையில் வந்து உட்கார்ந்தாலும் பாஜக தான் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்க உள்ளது. டெல்லி அரசியலை விரும்பவில்லை. தமிழ்நாடு அரசியலை தான் விரும்புகிறேன். பிரதமர் மோடியின் விருப்பத்தினாலேயே கோவை தொகுதியில் போட்டியிடுகிறேன்.
பிரதமர் மோடி 3 வது முறையாக பிரதமராக வரும் போது கோவை உலக அளவில் சிறந்து விளங்கும். 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும். ஜூன் 4 ஆம் தேதி தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் வளர்ச்சிவர வேண்டும்.தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி ஏன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார் என்றால், இங்கு வெற்றி பெறும் எம்.பி.க்கள் மூலம் தமிழ்நாட்டில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, தமிழ்நாட்டை மாற்றி காட்டுவோம்.
கோவையில் கோடிக்கணக்கான ரூபாய் கொண்டு வந்து செலவு செய்வார்கள். ஆனால், நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கமாட்டேன். பாஜக எதுவும் செலவு செய்யாது. தமிழ்நாடு வரலாற்றில் செலவு குறைந்த தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும். கடந்த தேர்தலில் அறிவித்த அதே அறிக்கையை தான் திமுக மீண்டும் வெளியிட்டுள்ளது. இதில் எதையும் அவர்கள் நிறைவேற்றபோவது இல்லை"
இவ்வாறு பாஜக மாநில தலைவரும், கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.